அசத்தும் கீழக்கரை! 10ரூபாய்க்கு மருத்துவம்



ரூ.10 கட்டணத்தில் மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவமனை, இலவச தையல் பயிற்சி மையம், பல்நோக்கு சேவை மையம் திறப்பு.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை 18 வாலிபர் தர்ஹா அருகில் உஸ்வதுன் ஹசனா சங்கத்தின் பழைய கல்யாண மண்டபத்தில் பி எஸ் எம் குழுமம் சார்பில் (27/12/2018) அன்று அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் ரூ.10 நுழைவு கட்டணத்தில் மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவமனை திறக்கக்கப்பட்டுள்ளது. இதில் சில மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருந்துகள் 10 ரூபாய்க்கும் இலவசமாகவும் வழங்கப்படுகிறது.


இம்மருத்துவமனையை பி எஸ் எம் நிர்வாக இயக்குநர் ஹபிபுல்லாஹ் கான் திறந்து வைத்தார்,மேலும் இதில் வக்கீல் ஹமீது சுல்தான் எஸ்.எஸ்.எம்.அகமது உசேன்,தாசில்தார் தமீம் ராசா,எம்.கே.சதக் அப்துல் காதர்,சதக் அன்சாரி,கீழக்கரை டைம்ஸ் யாசின்,மக்கள் அறக்கட்டளை நிறுவனர் உமர் அப்துல் காதர்,மக்கள் டீம் காதர்,ரோட்டரி சங்க தலைவர் சுந்தரம்,கீழக்கரை ஜமாத் பிரமுகர்கள்,உஸ்வத்துன் ஹசானா முஸ்லீம் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதோடு மட்டும் இல்லாமல்  இலவச தையல் பயிற்சி மையம் , அரசு தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையம் , நூலகம் ,உள்ளிட்டவைகள் திறந்து வைக்கப்பட்டது.

மேலும் இது போன்ற இவர்களது சேவை மேன்மேலும் வளர  கோபலப்பட்டினம் இணையதளம் சார்பாக வாழ்த்துகிறோம்…………..

Source: http://keelakaraitimes.com

Post a Comment