R.புதுப்பட்டிணம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் நிலவேம்பு கசாயம் வினியோகம்…!




புதுக்கோட்டை மாவட்டம்,மீமிசல் அருகாமையில் உள்ள R.புதுப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் மிஸ்பாஹில் உலூம் மதரஸாவில் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மீமிசல் பகுதியில் தொடா் மழைகாரணாக மா்ம காய்சல் பரவி வரும் சுழ்நிலையில் டெங்கு பரவாமல் தடுக்கும் பொருட்டு நிலவேம்பு  கசாயம் வழங்கும் நிகழச்சி மீமிசல் அருகே R.புதுப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் மிஸ்பாஹில் உலூம் மதரஸாவில் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி 26.11.2019 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் , ஆசிரியர்களுக்கும் மற்றும் மதரஸாவில் பயின்று வரும் மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் 9 மூலிகைகள் அடங்கிய நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.








தகவல்: கலந்தர் பாட்ஷா
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments