எலி மருந்து சாப்பிட்ட 2 பேர் நவீன சிகிச்சையில் குணமடைந்தனர் புதுக்கோட்டை அரசு டாக்டர்கள் சாதனை




தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக எலி பேஸ்ட் உட்கொள்வதால் உயிரிழப்புகள் மற்றும் கல்லீரல் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளன. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முறையாக சிகிச்சை அளித்து உயிரிழப்பு மற்றும் பாதிப்புகளை தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை மையமாக கொண்டு தமிழக அரசால் புதிய திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகிறது.
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் பூவதி தலைமையில் சிறப்பு மருத்துவர்கள் கொண்ட குழு உருவாக்கப்பட்டு இந்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன்படி சமீபத்தில் நமது மாவட்டத்தில் எலிக்கொல்லி பசை உட்கொண்டு மிகவும் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்ட ஆண் மற்றும் பெண் ஒருவருக்கு நவீன பிளாஸ்மா மாற்று சிகிச்சை செய்து அவர்கள் உயிர் மற்றும் உடல் நலன் காப்பாற்றப்பட்டுள்ளது. இவர்குளுக்குரிய இந்த நவீன சிகிச்சை முதல்-அமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டது. தனியார் மருத்துவமனையில் இச்சிகிச்சை பெரும் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. சிகிச்சை மேற்கொண்ட மருத்துவ குழுவினரை மருத்துவமனை முதல்வர் பூவதி பாராட்டினார். எலி பேஸ்ட் உட்கொண்டவர்கள் சற்றும் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவமனையை நாடினால் உரிய சிகிச்சை உடனே தொடங்க பெற்று நோயாளியை காப்பாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments