கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இரத்ததான முகாம்.!




கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளை மற்றும் மீமிசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகாமையிலுள்ள கோபாலப்பட்டிணத்தில் என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை மற்றும் மீமிசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் MKR ராசி திருமண மஹாலில் இன்று 02-08-2022 செவ்வாக்கிழமை நடைபெற்றது.

கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை மற்றும்  மீமிசல் ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் நிர்வாக குழு தலைமையில் நடைபெற்றது. 

முகாமை  இர. வே.கௌதம் கோட்டைப்பட்டிணம் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் மற்றும் சு.ராமசந்திர துரை MBBS மருத்துவர் அவர்கள் துவக்கி வைத்தனர்.

இர. வே.கௌதம் கோட்டைப்பட்டிணம் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் பொதுமக்களுக்கு இரத்ததானம் குறித்தான அவசியத்தை விளக்கினார்.

இம்முகாமில் 30 நபர்கள் இரத்ததானம் வழங்கினார்கள்.

இரத்ததானம் செய்தவர்களுக்கு அறந்தாங்கி இரத்த வங்கி குழுத்தலைவர் ராதாகிருஷ்ணன் அவர்கள் சான்றிதழ் வழங்கினார். என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையை பாராட்டி சான்றிதழ் வழங்கபட்டது. 

இம்முகாமில் கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் உறுப்பினர்கள் கோபாலப்பட்டிணம் ஜமாத் நிர்வாகிகள், GPM மக்கள் மேடை உறுப்பினர்கள், கோபாலப்பட்டிணம் தமுமுக நிர்வாகிகள்,கோபாலப்பட்டிணம் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள், பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள், மீமிசல் ஸ்கூல் பாயிஸ் கிரிக்கெட் குழு, காவல் துறை அதிகாரிகள், மருத்துவ துறை அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இரத்ததான கொடையாளர்கள் கலந்து கொண்டனர்.






இந்நிகழ்வில் அழைப்பை ஏற்று முகாமை துவக்கி வைத்த உயர்திரு.கௌதம் (காவல் துணை கண்காணிப்பாளர்) அவர்களுக்கும், அனைத்து மருத்துவர்களுக்கும், அனைத்து சிறப்பு அழைப்பாளர்களுக்கும், உயிர்காக்கும் இரத்ததானம் வழங்கிய கொடையாளர்களுக்கும் என்றும் உதவும் கரங்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

தகவல்: 
என்றும் உதவும் கரங்கள்
கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை
கோபாலப்பட்டிணம்.
9789476612, 8124150046
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments