புதுக்கோட்டை மாவட்டத்தில் தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் விவரம்




புதுக்கோட்டை மாவட்டத்தில் தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 சட்டமன்ற தொகுதிகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை (தனி), விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில் 79,954 ஆண் வாக்காளர்களும், 86,272 பெண் வாக்காளர்களும், 4 இதர வாக்காளர்களும் என மொத்தம் 1,66,230 வாக்காளர்கள் வாக்கு அளித்து உள்ளனர்.

இதேபோல் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் 96,379 ஆண் வாக்காளர்களும், 1,05,741 பெண் வாக்காளர்களும், 32 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,02,152 வாக்காளர்கள் வாக்கு அளித்து உள்ளனர்.

புதுக்கோட்டை தொகுதியில் 89,038 ஆண் வாக்காளர்களும், 99,073 பெண் வாக்காளர்களும், 16 இதர வாக்காளர்களும் என மொத்தம் 1,88,127 வாக்காளர்கள் வாக்கு அளித்து உள்ளனர். திருமயம் தொகுதியில் 82,050 ஆண் வாக்காளர்களும், 99,311 பெண் வாக்காளர்களும், 3 இதர வாக்காளர்களும் என மொத்தம் 1,81,364 வாக்காளர்களும் வாக்கு அளித்து உள்ளனர்.

ஆலங்குடி தொகுதியில் 82,581 ஆண் வாக்காளர்களும், 96,333 பெண் வாக்காளர்களும், 0 இதர வாக்காளர்களும் என மொத்தம் 1,78,914 வாக்காளர்களும் வாக்கு அளித்து உள்ளனர். அறந்தாங்கி தொகுதியில் 83,109 ஆண் வாக்காளர்களும், 97,908 பெண் வாக்காளர்களும், 1 இதர வாக்காளர்களும் என மொத்தம் 1,81,018 வாக்காளர்களும் வாக்கு அளித்து உள்ளனர். இதன்மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 5,13,111 ஆண் வாக்காளர்களும், 5,84,638 பெண் வாக்காளர்களும், 56 இதர வாக்காளர்களும் என மொத்தம் 10,97,805 வாக்காளர்கள் வாக்கு அளித்து உள்ளனர்.

83.83 சதவீத வாக்குப்பதிவு

6 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாகவும், அமைதியான முறையிலும் நடைபெற்றது. இதில் வாக்குப்பதிவு நாளான 23-ந் தேதி காலை 7 மணி முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்குப்பதிவு மேற்கொண்டனர். இதில் புதிய வாக்காளர்கள் மிகவும் எழுச்சியுடன் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோரும் அதிகளவில் ஆர்வமுடன் வாக்களித்தனர். மாலை 6 மணிக்கு பிறகும் பலர் வாக்களிக்க காத்திருந்ததால் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டத்தில் 83.83 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.

தொகுதி வாரியாக...

அதன்படி தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விவரம் வருமாறு:-

கந்தர்வகோட்டை (தனி) தொகுதி

மொத்த வாக்காளர்கள் - 1,96,024

பதிவான வாக்குகள் - 1,66,230

வாக்குப்பதிவு சதவீதம் - 84.8

விராலிமலை தொகுதி

மொத்த வாக்காளர்கள் - 2,25,090

பதிவான வாக்குகள் - 2,02,152

வாக்குப்பதிவு சதவீதம் - 89.81

புதுக்கோட்டை தொகுதி

மொத்த வாக்காளர்கள் - 2,25,944

பதிவான வாக்குகள் - 1,88,127

வாக்குப்பதிவு சதவீதம் - 83.26

திருமயம் தொகுதி

மொத்த வாக்காளர்கள் - 2,20,568

பதிவான வாக்குகள் - 1,81,364

வாக்குப்பதிவு சதவீதம் - 82.23

ஆலங்குடி தொகுதி

மொத்த வாக்காளர்கள் - 2,12,078

பதிவான வாக்குகள் - 1,78,914

வாக்குப்பதிவு சதவீதம் - 84.36

அறந்தாங்கி தொகுதி

மொத்த வாக்காளர்கள் - 2,29,792

பதிவான வாக்குகள் - 1,81,018

வாக்குப்பதிவு சதவீதம் - 78.77.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments