இராமநாதபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் நவாஸ்கனி அவர்களை புதுக்கோட்டை கிழக்கு தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் சந்திப்பு!



இராமநாதபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் சகோதரர் நவாஸ்கனி அவர்களை நேற்று 18/03/2019 ராமநாதபுரத்தில் தமுமுக மற்றும் மமக  புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி அவர்களை மனிதநேய மக்கள் கட்சி மாநில மீனவரணி செயலாளர் ஜெகதை செய்யது, தமுமுக மாவட்ட தலைவர்  (பொறுப்பு ) நவாஸ் கான்,  தமுமுக மாவட்ட செயலாளர் கிரீன் முகமது,  மமக மாவட்ட செயலாளர் கோட்டை அபுசாலிகு, தமுமுக மமக மாவட்ட பொருளாளர் அரசை ஜாபர் அலி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தமுமுக ஊடகப்பிரிவு,
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்

Post a Comment

0 Comments