அதிராம்பட்டிணத்தில் மூன்று பேர் கொண்ட கும்பல் அப்பாவி இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்…!தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பாரி மளிகையில் பணிபுரியும் ஊழியர் மீது கொலை வெறி தாக்குதல்.


நாகுடியை சேர்ந்த மஸ்தான் கனி என்பவர் பாரி மளிகை கடையில் பணி புரிந்து வருகிறார்.அவர் நேற்று(30.8.2019) இரவு கடையில் வேலை பார்த்து கொண்டு இருக்கும் போது கரையூர் தெருவை சார்ந்த திருப்பதி,ஹரிஹரன் மற்றும் விக்கி ஆகியோர் கடையினுள் சென்று மஸ்தான் கனி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியும்,அவர் சார்ந்த மதத்தை இழிவுப்படுத்தியும் கொச்சையான வார்த்தைகளில் திட்டியுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட மஸ்தான் கனியுடன் SDPI கட்சியின் மாநில செயலாளர் வழக்கறிஞர் சஃபியா நிஜாம் சென்று அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் மூன்று பேர் மீதும் புகார் கொடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மஸ்தான் கனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Source: adiraixpress

Post a comment

0 Comments