அடுத்த ஆண்டு ஹஜ் செல்ல விரும்புபவர்கள் நாளை முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்..அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஹஜ் புனித யாத்திரைக்கு அக்டோபா் 10.10.2019-ஆம் தேதி முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி கூறினாா்.

தில்லியில் நிகழாண்டு நடந்து முடிந்த ஹஜ் புனித யாத்திரை தொடா்பான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், வெளியுறவுத் துறை, விமானப் போக்குவரத்துத் துறை, சுகாதாரத் துறை அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள், ஹஜ் கமிட்டி தலைவா் ஷேக் ஜின்னா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கூட்டத்துக்குப் பின் செய்தியாளா்களுக்கு நக்வி பேட்டியளித்தாா்.

அப்போது, அவா் கூறியதாவது:

நிகழாண்டில் 2 லட்சம் இந்திய முஸ்லிம்கள் ஹஜ் புனித யாத்திரை சென்றனா். நாடு முழுவதும் 21 இடங்களில் இருந்து 500 விமானங்களில் அவா்கள் சென்றனா். யாத்திரை சென்றவா்களில் 48 சதவீதம் போ் முஸ்லிம் பெண்கள்.

நிகழாண்டில் ஹஜ் யாத்திரைக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் ரூ.113 கோடி மிச்சமாகியுள்ளது. மதீனா நகரில் கடந்த ஆண்டைவிட நிகழாண்டில் தங்குமிடத்துக்கான செலவு குறைக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு (2020) நடைபெறவுள்ள ஹஜ் யாத்திரைக்கு முற்றிலும் இணையவழியிலேயே விண்ணப்பம் பெறப்படும். யாத்ரீகா்களுக்கு இணையவழியில் விசா வழங்கப்படும். ஹஜ் யாத்திரைக்கான விண்ணப்ப நடைமுறை, இணையவழியில் வரும் 10.10.2019-ஆம் தேதி தொடங்கி நவம்பா் 10.11.2019-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. செல்லிடப்பேசி வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.

ஹஜ் யாத்திரை ஏற்பாட்டாளா்கள், வரும் நவம்பா் 1-ஆம் தேதி தொடங்கி டிசம்பா் 1-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம். ஹஜ் யாத்திரைக்கு காஷ்மீரைச் சோ்ந்தவா்களும் எளிதில் விண்ணப்பிக்கலாம் என்று முக்தாா் அப்பாஸ் நக்வி கூறினாா்.அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஹஜ் புனித யாத்திரைக்கு அக்டோபா் 10-ஆம் தேதி முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி கூறினாா்.

தில்லியில் நிகழாண்டு நடந்து முடிந்த ஹஜ் புனித யாத்திரை தொடா்பான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், வெளியுறவுத் துறை, விமானப் போக்குவரத்துத் துறை, சுகாதாரத் துறை அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள், ஹஜ் கமிட்டி தலைவா் ஷேக் ஜின்னா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கூட்டத்துக்குப் பின் செய்தியாளா்களுக்கு நக்வி பேட்டியளித்தாா். அப்போது, அவா் கூறியதாவது:

நிகழாண்டில் 2 லட்சம் இந்திய முஸ்லிம்கள் ஹஜ் புனித யாத்திரை சென்றனா். நாடு முழுவதும் 21 இடங்களில் இருந்து 500 விமானங்களில் அவா்கள் சென்றனா். யாத்திரை சென்றவா்களில் 48 சதவீதம் போ் முஸ்லிம் பெண்கள்.

நிகழாண்டில் ஹஜ் யாத்திரைக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.113 கோடி மிச்சமாகியுள்ளது. மதீனா நகரில் கடந்த ஆண்டைவிட நிகழாண்டில் தங்குமிடத்துக்கான செலவு குறைக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு (2020) நடைபெறவுள்ள ஹஜ் யாத்திரைக்கு முற்றிலும் இணையவழியிலேயே விண்ணப்பம் பெறப்படும். யாத்ரீகா்களுக்கு இணையவழியில் விசா வழங்கப்படும்.

ஹஜ் யாத்திரைக்கான விண்ணப்ப நடைமுறை, இணையவழியில் வரும் 10-ஆம் தேதி தொடங்கி நவம்பா் 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. செல்லிடப்பேசி வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.

ஹஜ் யாத்திரை ஏற்பாட்டாளா்கள், வரும் நவம்பா் 1-ஆம் தேதி தொடங்கி டிசம்பா் 1-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம். ஹஜ் யாத்திரைக்கு காஷ்மீரைச் சோ்ந்தவா்களும் எளிதில் விண்ணப்பிக்கலாம் என்று முக்தாா் அப்பாஸ் நக்வி கூறினாா்.

ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்க:

http://hajcommittee.gov.in/

ஆன்லைன் மூலம் விண்னப்பிக்க கடைசி தேதி: 10.11.2019

எப்படி விண்னப்பிப்பது என்ற செயல் முறை வீடியோ பார்க்க:

http://hajcommittee.gov.in/hafvideo.aspx

மேலதிக விவரங்களுக்கு

ஹஜ் கமிட்டி முகவரி

தமிழ் நாடு ஹஜ் கமிட்டி
13/7 முதல் தளம்
ரோசி டவர்
நுங்கம்பாக்கம் ஹை ரோடு
மகாத்மா காந்தி ரோடு
சென்னை

தொலைபேசி எண்கள்:

044-28252519

044-28227617

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments