கோபாலப்பட்டினத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பாக அகற்றப்பட்ட குப்பைகள்..!புதுக்கோட்டை மாவட்டம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கோபாலப்பட்டிணத்தில் குவிந்து கிடந்த குப்பைகள் அனைத்தும் அகற்றப்பட்டது.
கடந்த சில மாதங்களாக முக்கிய வீதிகளில் குப்பைகள்  மலைபோல் குவிந்து வந்த நிலையில் அதை நாம் செய்தியாக வெளியிட்டிருந்தோம். மேலும் கிராமசபையில் குப்பைகள் உடனடியாக  அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கோபாலப்பட்டினத்திற்கு கடந்த 07.10.2019 அன்று மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.சீனிவாசன் அவர்கள் வருகை தந்தார். அப்போது அகற்றப்படாத குப்பை மற்றும் சாக்கடை அடைப்புகளை பார்வையிட்டார். மிகவும் மோசமான நிலையில் இருந்த குப்பைகளை பார்த்து நாளையே அகற்றப்படும் என்ற வாக்குறுதிக்கினங்க நேற்றைய தினம் 08.10.2019 செவ்வாய்க்கிழமை ஆலமரம் ஈத்கா மைதானம் அருகில் குவிந்து கிடந்த குப்பைகள், பழையகாலனி வழியாக ஊற்றுக்கு செல்லும் வழியில் கிடந்த குப்பைகள், காட்டுகுளம் பகுதியில் குவிந்து கிடந்த குப்பைகள் மற்றும் சின்ன பள்ளிவாசல் அருகில் குவிந்து கிடந்த குப்பைகள் போன்றவற்றை JCB மற்றும் ட்ராக்ட்டர் உதவியுடன் அனைத்து பகுதியின் குப்பைகளும் அகற்றப்பட்டது.

விரைந்து நடவடிக்கை எடுத்த மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.சீனிவாசன் மற்றும் ஊராட்சி தனி அலுவலர் அவர்களை GPM மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

குறிப்பு: குப்பைகளை தயவு செய்து குப்பை தொட்டிகளில் கொட்டவும். குப்பையை அகற்றுபவர்கள் நம்மை போல் அவர்களும் மனிதர்கள் தான். ஒரு சில நேரங்களில் குப்பை தொட்டிக்கு வெளியே இருக்கக் கூடிய குப்பையை அகற்றக்கூடிய அவர்கள் முகம் சுழிக்கக்கூடிய அளவிற்கு அந்த குப்பை உள்ளது. 

எனவே இதுவரை இந்த தவறுகளை செய்தவர்கள் இனிமேலாவது பைக்கில் சென்று குப்பை கொட்டுபவராக இருக்கட்டும் அல்லது நடந்து சென்று குப்பை கொட்டுபவராக இருக்கட்டும் தயவு செய்து குப்பைகளை குப்பை தொட்டியில் கொட்டுங்கள்.. குப்பைகளை வெளியில் வீசிவிட்டு வருபவர்களே கொஞ்சம் சிந்தியுங்கள்... நம்முடைய பகுதியை நாம்தான் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

 சின்னப்பள்ளிவாசல் பகுதி குப்பையை அகற்றும் காட்சி

தோப்பு பகுதி குப்பைகள் அகற்றபட்டுள்ள காட்சி 

 காட்டுகுளம் பகுதி குப்பையை அகற்றும் காட்சி ஆலமரம் ஈத்கா மைதானம் அருகில் குப்பைகள் அகற்றபட்டுள்ள காட்சிகள்

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments