பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு - முழுவிவரம்....அயோத்தி வழக்கில் அரசியல் சாசன அமர்வில் உள்ள தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் ஒரே தீர்ப்பை வழங்கி உள்ளனர். அயோத்தி நிலத்தை 3 ஆக பிரித்தது தவறு என்று குறிப்பிட்டுள்ளனர்.


நிலத்திற்கு உரிமை கோரிய ஷியா அமைப்பின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஒரு மதத்தினரின் நம்பிக்கை அடுத்த மதத்தின் நம்பிக்கையை தடுப்பதாக இருக்க கூடாது. மத உரிமை என்பது அடிப்படை உரிமை.

அயோத்தி நிலத்திற்கு உரிமை கோரும் நிர்மோகி அகார மனுவில் உண்மை இருப்பதாகவும், ஆதாரம் இருப்பதாகவும் தெரியவில்லை. அதனால் நிலத்திற்கு உரிமை கோரும் உரிமை அந்த அமைப்பிற்கும் இல்லை.எனவே அவர்கள் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

பாபர் மசூதி பாபர் ஆட்சி காலத்தில் தான் கட்டப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். அதே சமயம் பாபர் மசூதி எப்போது கட்டப்பட்டது என்பதற்கு எந்த துல்லிய ஆதாரமும் இல்லை. பாபர் மசூதியின் கீழ் பகுதியில் இருக்கும் பழைய அமைப்பு இஸ்லாமிய முறைப்படி இல்லை. அங்கிருக்கும் பழைய கட்டிடம் இஸ்லாமிய முறைப்படி கட்டப்படவில்லை.பாபர் மசூதிக்கு முன்பாக அந்த இடத்தில் என்ன கோவில் இருந்தது என்பதை நிருபிக்கவில்லை. இந்த கோவில் இடிக்கப்பட்டதா என்றும் நிருபிக்கவில்லை.

கீழே இருக்கும் கட்டிடத்தை வைத்து நில உரிமையை மொத்தமாக வழங்க முடியாது. அங்கு இந்து கோவில் இருந்ததாக நீதிமன்றத்தில் நிருபித்தாலும் நில உரிமையை வழங்க முடியாது.

மத மற்றும் நம்பிக்கை அடிப்படையில் நிலம் குறித்த தீர்ப்பு வழங்க முடியாது. சட்ட விதிகளின்படியே இதில் தீர்ப்பு வழங்க முடியும். இசுலாமியர்கள் அந்த நிலத்தின் உட்பகுதியில் தொழுகை செய்தது வந்தது நிரூபணம் ஆகிறது. அதேபோல் வெளிப்பகுதியில் இந்துக்கள் வழிபாடு நடத்தி வந்துள்ளனர். அதேபோல் இந்துக்கள் ராமர், அயோத்தியில் நிலத்தின் உட்பகுதியில் பிறந்ததாக நம்புகிறார்கள். அயோத்தியில் ராமர் பிறந்ததாக இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன.

ஒரு மதத்தினரின் நம்பிக்கை, மற்ற மத நம்பிக்கை தடுப்பதாக இருக்கக்கூடாது. இறை நம்பிக்கைக்குள் செல்வது தேவையற்றது பாபர் மசூதி பாபர் ஆட்சி காலத்தில் தான் கட்டப்பட்டது என்பதை ஏற்று கொள்கிறோம்.  அதேசமயம் பாபர் மசூதி எப்போது கட்டப்பட்டது என்பதற்கு துல்லியமான ஆதாரம் இல்லை.

பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களது என இஸ்லாமிய அமைப்புக்கள் நிரூபிக்கவில்லை. 1992-ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்ட விரோதம். சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறிய செயல்.

இந்திய தொல்லியல் துறை கொடுத்துள்ள ஆதாரங்கள் ஆராயப்பட்டன12வது நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் இருந்ததாக இந்திய தொல்லியல் துறை கூறுகிறது தொல்லியல் துறை ஆய்வறிக்கையை நிராகரிக்க முடியாது. எனவே ஆவணப்படி அயோத்தி நிலம் அரசுக்கே சொந்தம் அங்கு ராமர் கோவில் கட்ட அனுமதி அளிக்கின்றோம் . மேலும்  கோவில் கட்ட அறக்கட்டளை 3 மாதத்திற்குள் உருவாக்க வேண்டும்.

சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்கப்படும். அயோத்தி நிலம் ராம்லல்லா அமைப்பிற்கே சொந்தம் நிலத்தின் முற்றத்தை இந்துக்கள் தங்கள் வசம் வைத்திருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments