இயற்கையை நேசிக்கும் மதுரையைச் சேர்ந்த தந்தை - மகள் ஒரு லட்சம் விதைப்பந்துகளை வீசுவதை இலக்காக வைத்துள்ளதாகக் கூறுகின்றனர்.
மதுரையை சேர்ந்த அசோக்குமார் தனது மகள் ஷஸ்மிதாவுடன் இணைந்து ஒரு லட்சம் விதைப்பந்துகளை வீசுவது என்ற இலக்கோடு பயணித்து வருகிறார். இதற்காக தங்களின் பயணங்களின்போது மறக்காமல் விதைப்பந்துகளை எடுத்துவைத்துக் கொள்கின்றனர். வீட்டுக்கு வீடு மரம் வளர்ப்பது முக்கியம் என்றாலும் சமூகக் காடு வளர்ப்பு அதைவிட முக்கியமானது என்கிறார் அசோக் குமார்.
தலைவர்கள் மீது கொண்ட ஆர்வத்தால் புத்தகங்கள் சேகரித்து எழை, எளிய குழந்தைகள் பயன்பெறும் வகையில் ஒரு நூலகம் ஒன்றை அமைத்து அனைவருக்கும் வாசிப்பு பழகத்தை தூண்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இவர் தற்போது தனது மகள் ஷஸ்மிதாவுடன் இணைந்து விதைப் பந்துகள் வீசும் பணியில் ஈடுபட்டுவருகிறார்.
அசோக்கிடம் பேசினோம் : நல்ல கருத்துகளை மக்களுக்கு எடுத்துரைத்த எல்லா தலைவர்களையும் எனக்கு மிகவும் பிடிக்கும் காமராசர் ஐயா கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர். அதனால் வாசிப்பின் மூலம் குழந்தைகள் அறிவை மேம்படுத்த வேண்டும் என தொடர்ந்து புத்தகம் சேகரிப்பில் ஈடுபட்டு நூலகம் அமைத்துள்ளேன்.
அதனை தொடர்ந்து இயற்கை மீது கொண்ட காதலால் கண்மாய் தூர்வாருவது, பனைவிதை விதைப்பது, மரம் நடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என பல்வேறு இயக்கங்களுடன் இணைந்து களப்பணி ஆற்றுகிறேன். தற்போது என் மகளுடன் இணைந்து விதைப் பந்துகள் வீசி வருகிறேன். தற்போதைய காலகட்டத்தில் வீட்டுக்கொரு மரம் வளர்ப்பு என்பதை தாண்டி சமூக காடுவளர்ப்பு முக்கியம் என்று நினைக்கிறேன்.
எனவே தற்போதைய மழைக் காலத்திற்குள் 1 லட்சம் விதைப் பந்துகள் வீச வேண்டும் என இலக்கை நோக்கி. பயணங்களின் போது நிறைவேற்றி வருகிறோம். ஆரம்பத்தில் ஒத்தக்கடை அரசு துவக்கப் பள்ளி ஆசிரியர் மோசஸ் விதைப் பந்துகள் கொடுத்து உதவினார். அதிக அளவு விதைப் பந்துகள் தேவைப் படுவாதல் மகளுடன் இணைந்து விதைப் பந்துகளை நாங்களே உருவாக்கி வருகிறோம். 1 லட்சம் விதைகளும் வளருமா என்று தெரியவில்லை. ஆனால் பாதிக்குப் பாதி முளைத்தாலே அது முழு வெற்றிதான் என்றார்..
இவர்கள் செயல்பாடுகளைப் பாராட்டி பல்வேறு அமைப்புகள் கௌரவித்துள்ளன. தங்களின் செயல்பாடுகளுக்கு அதுவே மிகப்பெரிய ஊக்கசக்தி என்று புன்னகைக்கிறார் அசோக் குமார்.
நன்றி :- விகடன்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!



0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.