ஓமன் நாட்டில் முன்னணி நிறுவனத்தில் பணிபுரிய எலக்ட்ரீஷியன்கள் தேவைப்படுகின்றனர். ஐ.டி.ஐ அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மூன்று ஆண்டு பணி அனுபவம் பெற்ற எலக்ட்ரிக்கல் டெக்னிஷியன்ஸ், எலக்ட்ரிக்கல் லைன்மேன், எலக்ட்ரீஷியன்கள் தேவைப்படுகின்றனர்.
தேர்வு செய்யப்படுவோருக்கு பணி அனுபவத்திற்கு ஏற்ப 24 ஆயிரம் ரூபாய் முதல் 37 ஆயிரம் ரூபாய் வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
விசா மற்றும் ஓமன் நாட்டின் சட்டத்திற்கு உட்பட்ட இதர சலுகைகள் வழங்கப்படும்.இப்பணிக்கான நேர்முகத் தேர்வு டிச.14, 15ம் தேதிகள் சென்னை, கிண்டி, திரு.வி.க.தொழிற்பேட்டையில் உள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் நடக்க உள்ளது.
விருப்பம் உள்ளவர்கள் தங்களின் சுயவிபரங்கள் அடங்கிய விண்ணப்பம்அசல் கல்விச் சான்றிதழ், அனுபவ சான்றிதழ், பாஸ்போர்ட் மற்றும் நகல்கள், புகைப்படத்துடன் பங்கேற்கலாம்.
மேலும் விபரங்களை, http://www.omcmanpower.com/jobInfo.php?jid=100 என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.