ஜனவரி 26 நடைபெறவுள்ள கிராமசபை கூட்டத்தின் அஜெண்டா தமிழக அரசால் வெளியீடு.!



கிராமசபை கூட்டத்தின் அஜெண்டா (கிராமசபை கூட்டத்திற்கான விவாத பொருள்கள்) தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கிராமசபை கூட்டத்தின் அஜெண்டா (கிராமசபை கூட்டத்திற்கான விவாத பொருள்கள்) என்பது மிக முக்கியமான ஒன்று.

வருகிற (ஜனவரி 26) நடத்த வேண்டிய கிராமசபைக் கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், மழைநீர் சேகரிப்பு அமைப்பது, குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதித்தல், ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரங்கள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம், பிளாஸ்டிக் தடை, முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் 2020-21, பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஜல் சக்தி அபியான் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், சுகாதார திட்டங்கள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உட்பட விவாதிக்க வேண்டிய தீர்மானங்களை தற்போது தமிழக அரசே அளித்துள்ளது.

மாநில அரசு அளித்துள்ள தீர்மானங்களுடன் அந்தந்த கிராமங்களுக்கு தேவையான தீர்மானங்களையும் கிராம சபைக் கூட்டங்களில் நிறைவேற்றுவது அவசியம்.

கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் அஜெண்டாவை (கிராமசபை கூட்டத்திற்கான விவாத பொருள்கள்) படித்து விட்டு அதன் நகலையும் எடுத்துக்கொண்டு கிராமசபை கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். தீர்மான அம்சங்கள் குறித்து விவாதித்து, திட்டங்களின் செயல்பாடுகளை முடுக்கிவிட வேண்டும்.














கிராமசபை கூட்டத்தில் விவாதிக்கவேண்டிய 21.01.2020 அன்று வெளியிடப்பட்டுள்ள கூடுதல் பொருள்;












26.01.2020 Pdf பதிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் இரண்டு பைல்கள் உள்ளது. இரண்டையும் கவனமாக வாசித்து பின் கிராமசபையில் உங்களுடைய கேள்விகளை கேளுங்கள்.



கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments