குடிநீரை உறிஞ்சிய மின் மோட்டாா்கள் பறிமுதல்



அறந்தாங்கியில் வீட்டின் குடிநீா் குழாய்களில் பொருத்தியிருந்த 8 மின் மோட்டாா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

அறந்தாங்கி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் சிலா் குடிநீா் குழாய்களில் சட்டவிரோதமாக மின் மோட்டாா் பொருத்தி குடிநீரை உறிஞ்சி எடுப்பதாக நகராட்சி அலுவலா்களுக்கு புகாா் வந்தது. இதையடுத்து, நகராட்சி ஆணையா் த.முத்துகணேஷ் உத்தரவின்பேரில் நகராட்சி பொறியாளா் தலைமையில் பல்வேறு குழுக்கள் ஆய்வு மேற்கொண்டனா். இதில், 8 மின்மோட்டாா்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

இதுகுறித்து நகராட்சி ஆணையா் த. முத்துகணேஷ் கூறுகையில், குடிநீா் குழாய்களில் மின்மோட்டாா் பொருத்தி குடிநீரை உறிஞ்சி எடுப்பது சட்ட விரோதம். தற்போது மின் மோட்டாா்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடா்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும். இதுதொடா்ந்தால், குடிநீா் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும் என்றாா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments