இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியில் உலக கவனத்தை ஈர்த்த CAA-வுக்கு எதிரானப் போராட்டம்!இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம்  நடைபெற்றது.


முதலில் பேட் செய்த இந்திய அணி 255 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்ததாக களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்று அசத்தியது.

இதற்கிடையில், போட்டியைப் பார்வையிட வந்த மும்பை பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி மும்பை ஆகிய கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் NO CAA, NO NRC என்று குறிக்கும் வகையில் ஆடை அணிந்து வந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். சுமார், பத்து பேர் வெள்ளை நிற டிசர்ட்டில் ஒவ்வொரு எழுத்தாக எழுதப்பட்டு வரிசையாக நின்றனர். அது பலரது கவனத்தையும் பெற்றது. CAA,NRC-க்கு எதிரானப் போராட்டம் உலக அளவில் கவனம் பெற்றது.


கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments