உனக்கு ஏன் இவ்வளவு இஸ்லாமிய நண்பர்கள்?’ - சமூக ஆர்வலருக்கு உ.பி காவல் நிலையத்தில் நேர்ந்த துயரம்!
சமூக ஆர்வலர் ராபின் வர்மா

ல்உனக்கு ஏன் இவ்வளவு இஸ்லாமிய நண்பர்கள்?’ - சமூக ஆர்வலருக்கு உ.பி காவல் நிலையத்தில் நேர்ந்த துயரம்!

உனக்கு நடப்பதைப் போலவே உன்னுடைய மனைவிக்கும் குழந்தைக்கும் நடக்கும்’ என்று காவல்துறையினர் மிரட்டியதாகவும் சமூக ஆர்வலர் ராபின் வர்மா தெரிவித்துள்ளார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடுமுழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். இதில், லக்னோவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரும் ஆசிரியருமான ராபின் வர்மாவும் அடங்குவார். சி.ஏ.ஏ-க்கு எதிராக லக்னோவில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட இவரை கடந்த டிசம்பர் 20-ம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர்.

லக்னோவில், ஹஸ்ரத்கஞ்ச் எனும் பகுதியிலுள்ள உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருக்கும்போது பத்திரிகையாளர் ஒருவருடன் ராபின் வர்மா அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். முதலில் ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையத்துக்கும் பின்னர் சுல்தான்கஞ்ச் காவல் நிலையத்துக்கும் அழைத்துச் செல்லப்பட்டு பெல்ட்டால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போராட்டம்
போராட்டம்


குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக ஹஸ்ரத்கஞ்ச் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவானவர்களின் பெயர் பட்டியலில் முதலில் ராபினின் பெயர் இல்லை என்று தகவல்கள் கூறுகின்றன. பின்னர்தான், அவர்மீது கலவரம், கொலை முயற்சி, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்திருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments