அறந்தாங்கியில் மத்திய அரசின் புதிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்அறந்தாங்கியில் மத்திய அரசின் புதிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மத்திய அரசின் புதிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி அறந்தாங்கி ஜமாஅத் மற்றும் சட்டமன்ற தொகுதி ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில்  நாளை 15-02-2020  சனிக்கிழமை மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை அறந்தாங்கி வ.உ.சி திடலில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.


இந்த பொதுக்கூட்டத்தில் தமுமுக மாநில தலைவர் பேராசிரியர் 
M.H ஜவாஹிருல்லா Ex எம்எல்ஏ அவர்கள் , முன்னாள் மத்திய நிதி அமைச்சர் திரு ப. சிதம்பரம் அவர்கள், திராவிட முன்னேற்ற கழகம் திரு திருச்சி சிவா அவர்கள் , திருச்சி பாராளுமன்ற உறுப்பினர்
திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் ,
திருமயம் சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ் ரகுபதி அவர்கள் 
ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாப் N. நவாஸ்கனி M.P அவர்கள் மாநில தலைவர் தமஜக ஜனாப் கே.எம் சரீப் அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருமதி  கே. பாலபாரதி Ex எம்எல்ஏ அவர்கள் தீக்கதிர்
ஆசிரியர்  திரு மதுக்கூர் ராமலிங்கம் அவர்கள் 
திராவிட தலைமை கழக பேச்சாளர் திரு  இரா. பெரியார் செல்வம் அவர்கள் ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு சிவ.வீ மெய்யநாதன் அவர்கள் ஆகியோர்கள் கண்டன உரை நிகழ்த்த உள்ளனர்.

ஆகவே அறந்தாங்கி ஜமாஅத் மற்றும் சட்டமன்ற தொகுதி ஜமாஅத் கூட்டமைப்பு  நடத்தும் மத்திய அரசின் புதிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில் அறந்தாங்கி மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் அலை கடலென திரண்டு குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி வலியுறுத்தி அறந்தாங்கி ஜமாஅத் மற்றும் சட்டமன்ற தொகுதி ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

இந்திய ஜனநாயக மக்களின் அனைத்து உரிமைகளையும் மீட்டெக்க உங்களை அழைப்பது

அறந்தாங்கி ஜமாஅத் மற்றும் சட்டமன்ற தொகுதி ஜமாஅத் கூட்டமைப்பு

தொடர்புக்கு...

9842445799, 9842455731
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments