கறம்பக்குடியில் இஸ்லாமியர் கடைகளில் பொருள் வாங்காதீங்க கொரோனா வரும் என வதந்தி பரப்பியவர் கைது.!புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் "இஸ்லாமியர் கடைகளில் பொருள் வாங்காதீங்க கரோனா வரும்" என்று சமூக வலைத்தளங்களில் பதிவு பரவியது.

இதைப்பார்த்த ஜமா அத்தார்கள் உள்பட பல இஸ்லாமிய அமைப்பினரும் கறம்பக்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்தப் புகார்களைப் பதிவு செய்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், சப்- இன்ஸ்பெக்டர் உள்ளி்ட்ட  போலீசார், கடந்த ஒரு வாரமாக வதந்தி பரப்பிய நபரைத் தேடி வந்தனர். இந்த நிலையில் கந்தர்வகோட்டை தாலுகா மங்களாகோயில் காசிநாதன் மகன் கார்த்திக் (33) என்ற இளைஞர் தான் வதந்தி பரப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த இளைஞரைக் கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகினறனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments