மணமேல்குடி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவரை போலீசார் நேற்று கைது செய்தனர். சாராயம் குடிக்க சென்ற ஊராட்சி செயலாளரும் சிக்கினார்.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனை நடைபெற்று வருகிறது. ஒரு சில இடங்களில் பதுக்கி வைத்து ரூ.100-க்கு விற்ற மதுபாட்டில்கள் ரூ.600 வரை விற்று வருகின்றனர். அவர்களையும் போலீசார் அவ்வப்போது கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே வேட்டணிவயல் கிராமத்தில் சிலர், குடிசையில் வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மணமேல்குடி போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் வந்தது.இதையடுத்து இன்ஸ்பெக்டர் சாமுவேல்ஞானம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அப்போது அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சிய வேட்டணிவயலை சேர்ந்த தியாகராஜன், சாராயம் குடிக்க வந்த வெள்ளூர் ஊராட்சி செயலாளர் தம்பிதுரை(48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.