இந்து பெண்ணின் உடலை இரண்டரை கிலோமீட்டர் தோளில் சுமந்து அடக்கம் செய்த இஸ்லாமிய இளைஞர்கள் !கொரோனா காரணமாக நாடு முழுவதும் லாக் டவுன் உள்ளது. ஊரடங்கினால் எல்லாரும் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். எந்த போக்குவரத்து வசதியும் இல்லை. முழு கட்டுப்பாட்டில் நாடு உள்ளது இந்நிலையில், டெல்லியை சேர்ந்த இந்து பெண் ஒருவர் உடம்பு சரியில்லாமல் இறந்துவிட்டார்.


இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.. தாய் இறந்துவிட்ட செய்தியை வெளியூர்களில் உள்ள மற்ற சொந்தக்காரர்கள், நண்பர்களுக்கு தெரியப்படுத்தினர். ஆனாலும் யாராலும் போக்குவரத்து வசதி இல்லாததால் வர முடியவில்லை.

அதே ஊரில் உள்ளவர்களாலும் இறந்த உடலை பார்க்க வெளியே வரமுடியவில்லை. அம்மாவின் சடலத்தின் அருகில் 2 மகன்கள் மட்டுமே இருந்தனர். பிணத்தை தூக்குவதற்கு கூட யாருமே இல்லாமல் 2 மகன்களும் தவித்தனர். இதை அந்த பகுதியில் இருந்த இஸ்லாமிய இளைஞர்கள் கவனித்தனர். நிலைமையை புரிந்து கொண்டனர். “நாங்கள் இருக்கோம்” என்று சொல்லி பிணத்தை தூக்க முன்வந்தனர்.

ஆனால் மயானம் இருப்பதோ வெகு தொலைவில். 2.5 கிலோ மீட்டர் தூரமுள்ள சுடுகாட்டிற்கு செல்ல வண்டி எதுவும் இல்லை. அதனால் இரண்டரை கிலோ மீட்டருக்கு நடந்தே செல்வது என முடிவு செய்தனர். இறந்த பெண்ணின் உடலை 2 மகன்களுடன் சேர்ந்து இஸ்லாமிய இளைஞர்கள் தூக்கி சென்றனர். இந்த சம்பவத்தை அந்த பகுதி மக்கள் வீடுகளில் இருந்தே பார்த்தனர். மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள சுடுகாட்டுக்கு உடல் கொண்டு வரப்பட்டு அங்கு தகனம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் வைரலானது.


காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் இந்த சம்பவம் குறித்து பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த சமுதாயத்திற்கு அவர்கள் ஒரு முன்மாதிரியாக உள்ளனர் என்றும் புகழாரம் சூட்டியிருக்கிறார். பெண்ணின் உடலை தகனம் செய்தது குறித்து சம்பந்தப்பட்ட இளைஞர்கள் சொன்னதாவது : “அவங்க இந்து பெண்தான். நாங்க எல்லாம் ஒரே ஏரியாதான். எங்களுக்கு சின்ன வயசில் இருந்தே அந்தம்மாவை தெரியும். அம்மாவுக்கு செய்ற எங்களுடைய கடமை இது” என்கிறார்கள்!!

எதை வைத்து அரசியல் செய்யலாம், எதை வைத்து பிரிவினையை உண்டாக்கலாம், எதை வைத்து மததுவேஷத்தை பரப்பலாம் என்று எண்ணும் சிலருக்கு இந்த சம்பவம் மேலும் ஒரு சம்மட்டி அடியாகும். அதுவும் டெல்லி மாநாட்டை திசை திருப்ப நினைப்பவர்களுக்கும் இது ஒரு பலமான சவுக்கடியும் கூட ! எவ்வளவுதான் சிலர் பிரித்தாளும் சூழ்ச்சியை கட்டவிழ்த்து விட்டாலும் இந்து – முஸ்லீம் இடையே இருக்கும் சகோதரத்துவத்தை யாராலும்.. ஒருபோதும்.. சிதைக்கவோ, சிதறடிக்கவோ முடியவே முடியாது !
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments