இஸ்லாமிய எதிர்ப்புப் பதிவு – கனடாவிலும் இந்துத்வா ஆதரவாளர் மீது நடவடிக்கை!



சமூக வலைதளத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு பதிவுக்காக கனடாவில் இந்திய வம்சாவழியை சேர்ந்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துத்வாவினர் நடத்தும் அத்துமீறல்கள், அடக்குமுறைகள் தற்போது உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது.

அரபு நாடுகளில் உள்ள அரபியர்கள், அதிகாரிகள் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கனடாவில் ரவி என்பவர் இஸ்லாமிற்கு எதிராக சமூக வலைதளத்தில் பதிந்த பதிவிற்காக அவர் பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கடைபிடிப்பதால் மசூதிகள் பூட்டப்பட்டுள்ளன. இதனால் கனடாவில் ரம்ஜான் நோன்பு காலத்தில் பொதுவில் ஒலிபெருக்கியில் பாங்கு அழைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments