கோபாலப்பட்டிணம் GPM மக்கள் மேடையின் 6-வது ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் தேர்வு..!



புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் சமூகநல அமைப்பான GPM மக்கள் மேடையின் 6-வது ஆலோசனை குழு உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது.

GPM மக்கள் மேடை என்ற சமூக அமைப்பு கோபாலப்பட்டிணம் மக்களுக்கு பயன் தரும் வகையில் பல்வேறு பொது சேவைகளை செய்து வருகிறது. இதற்கு முன்பு ஐந்து ஆலோசனை குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு பல லட்சம் மதிப்பிலான திட்டமான மையவாடி சுற்று சுவர் அமைப்பு, குறைந்த விலையில் குடி தண்ணீர் விநியோகம் மற்றும் ஆம்புலன்ஸ் (AMBULANCE) அர்ப்பணிப்பு போன்றவை நிறைவேற்றினர்.

200-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட இந்த மக்கள் மேடையில் பல நலத்திட்டங்கள் மற்றும் மாதாந்திர வரவு செலவுகளை நிர்வகிக்க ஏழு பேர் கொண்ட ஆலோசனை குழு உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்படுகிறார்கள்.  இந்த ஏழு பேர் கொண்ட ஆலோசனைக் குழுவில் உள்நாட்டில் உள்ள இரண்டு பேர் நிரந்தர ஆலோசனை உறுப்பினர்களாக உள்ளனர். மற்ற ஐந்து நபர்களில் இரண்டு நபர்கள் வெளிநாட்டில் வசிப்பவராகவும், மற்ற மூன்று நபர்கள் உள்நாட்டில் வசிப்பவராகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆலோசனை குழுவின் நிர்வாக காலம் ஒரு ஆண்டு ஆகும்.

அதனடிப்படையில் 2021-ஆம் ஆண்டிற்க்கான ஆலோசனை குழு தேர்வு செய்வதற்காக கடந்த 4.12.2020 அன்று மக்கள் மேடை உறுப்பினர்கள் விருப்பம் தெரிவிக்க வேண்டி அறிவிப்பு செய்யப்பட்டது. இந்தநிலையில் உள்நாட்டில் இருந்து ஆலோசனை உறுப்பினர்களாக செயல்பட மூன்று நபர்கள் மட்டுமே விருப்பம் தெரிவித்த நிலையில் போட்டியின்றி தேர்வு என அறிவிக்கப்பட்டது. மேலும் வெளிநாட்டில் இருந்து ஆலோசனை குழு உறுப்பினர்களாக செயல்பட இரண்டு நபர்கள் விருப்பம் தெரிவித்தநிலையில் போட்டியின்றி தேர்வு என அறிவிக்கப்பட்டது.

இவ்வாறாக உள்நாட்டு ஆலோசனை குழு உறுப்பினர்கள் ஐந்து நபர்களும், வெளிநாட்டு ஆலோசனை உறுப்பினர்கள் இரண்டு நபர்களும் என மொத்தம் ஏழு நபர்கள் 2021-ஆம் ஆண்டுக்கான ஆலோசனை குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

2021-ஆம் ஆண்டுக்கான ஆலோசனை குழு உறுப்பினர்கள் விபரம்,

அறங்காவாளர்: பாவா மரைக்காயர் த/பெ. முகம்மது நெய்னா

1.A.ரபீக் த/பெ அப்துல் மஜீது (கோபாலப்பட்டிணம்)

2.முகம்மது இபுராகிம் த/பெ சாகுல் கமீது (கோபாலப்பட்டிணம்)

3.அபுபக்கர் சித்தீக் த/பெ முகம்மது ஆரிப் (கத்தார்)

4.மு.முஹம்மது மீராசா த/பெ முஹம்மது காசிம் (கோபாலப்பட்டிணம்)

5.சித்திக் ரஹ்மான் S/o அப்துல் காதர் (தம்மாம், சவூதி அரேபியா)

நிரந்தர ஆலோசனை குழு உறுப்பினர்கள்:

6.அலி அக்பர் S/o அகமது கபீர் (கோபாலப்பட்டிணம்)

7.முஹம்மது முனோபர் S/o சேக் நூர்தீன் (கோபாலப்பட்டிணம்)

இந்த காலத்தில் நன்கொடை வழங்க ஏராளமான தனவந்தர்கள் இருக்கிறார்கள். ஆனால் நேரம் ஒதுக்கி களப்பணி செய்ய ஒரு சிலரே முன்வருகிறார்கள். அதனடிப்படையில் 2021-ஆம் ஆண்டிற்கான ஆலோசனை குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட GPM மக்கள் மேடை உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் GPM மீடியா சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

GPM மக்கள் மேடை ஆம்புலன்ஸ் தொடர்பு எண்: அசாருதீன் - 85267 53714

தகவல்: ஆலோசனை குழு 5, GPM மக்கள் மேடை, கோபாலப்பட்டிணம்.

தொகுப்பு: GPM மீடியா அட்மின் குழு

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments