தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முயற்சியால் மதுரை - கோட்டைப்பட்டினம் பேருந்து மீண்டும் இயக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தினசரி மதுரையில் இரவு 10.35 மணிக்கு புறப்பட்டு கோட்டைப்பட்டினம் வரும் பேருந்து தொண்டியுடன் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இதுகுறித்து பொதுமக்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோட்டைப்பட்டினம் கிளைக்கு தகவல் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து 04/01/21 திங்கள்கிழமை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாளன்று TNTJ கோட்டைப்பட்டினம் கிளையின் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்தப் பேருந்தை மீண்டும் இயக்க பரிந்துரை செய்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்கள்.
கோரிக்கையை ஏற்று விரைந்து நடவடிக்கை எடுத்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தகவல்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோட்டைப்பட்டினம் (கிளை)
புதுக்கோட்டை மாவட்டம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments