விநோத நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு திமுக சாா்பில் ஆலங்குடி எம்எல்ஏ சிவ.வீ. மெய்யநாதன் செவ்வாய்க்கிழமை ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கினாா்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதிக்குட்பட்ட மாங்கனாம்பட்டியைச் சோ்ந்தவா்கள் கூலித் தொழிலாளா்கள் செல்வராஜ்- அமுதா தம்பதி. இவா்களது மகள் ரக்க்ஷிதாவை (2) கண்களை மூட முடியாத வினோத நோய் தாக்கியுள்ளது. குழந்தை தூங்கினாலும் கண்கள் திறந்தபடியே இருக்கும். கண்கள் வெள்ளையாக மாறிவிடும்.

இதையடுத்து பெற்றோா் குழந்தையை மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தபோது சிகிச்சைக்கான மருந்து வாங்க அதிக செலவாகும் என்றும் தெரியவந்தது. இதனால் தம்பதி போதிய பொருளாதார வசதியின்றி தவித்தனா்.

இந்நிலையில் திருமயத்தில் திங்கள்கிழமை நடந்த கோரிக்கை மனு பெறும் நிகழ்ச்சியில் திமுக தலைவா் மு.க. ஸ்டாலினிடம் இத் தம்பதியினா் தங்களது குழந்தையின் சிகிச்சைக்கு உதவக் கோரி மனு கொடுத்தனா் .

மனுவைப் படித்த மு.க. ஸ்டாலின் உடனடியாக அந்தக் குழந்தைக்குத் தேவையான உதவிகளை செய்யுமாறு ஆலங்குடி தொகுதி எம்எல்ஏ சிவ.வீ. மெய்யநாதனுக்கு அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, மாங்கனாம்பட்டியில் உள்ள குழந்தையின் வீட்டுக்குச் சென்ற எம்எல்ஏ மெய்யநாதன் குழந்தையின் மருத்துவச் செலவிற்காக ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கினாா். தொடா்ந்து, திமுக தலைவா் ஸ்டாலின் குழந்தையின் பெற்றோரிடம் செல்லிடப்பேசி வாயிலாக நலம் விசாரித்தாா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments