மனிதநேய ஜனநாயக கட்சி மணமேல்குடி ஒன்றியம் சார்பில் வருகிற செப்.4 அரசு கல்வி உதவித்தொகை இலவசமாக பதிவு செய்யும் முகாம்!



மனிதநேய ஜனநாயக கட்சி மணமேல்குடி ஒன்றியம் சார்பில் கல்வி உதவி தொகை இலவசமாக பதிவு செய்யும் முகாம் வருகிற 04.09.2021 சனிக்கிழமை நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் 04.09.2021 சனிக்கிழமை காலை 9.30 முதல் கோட்டைப்பட்டினம் செக்போஸ்ட் அருகில் சிறுபான்மை மாணவ-மாணவியருக்கான கல்வி உதவித்தொகை 2021-2022 ஆம் ஆண்டிற்கான இலவசமாக பதிவு செய்யும் முகாம் நடைபெற உள்ளது. அதுசமயம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி படிக்கும் தகுதி பெற்ற மாணவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

2021-2022 ஆம் ஆண்டுக்கான சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை அறிவிப்பு

 (சிறுபான்மை சமூகங்களில் முஸ்லிம்கள், பௌத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், கிறிஸ்த்துவர்கள் மற்றும் பார்ஸிகள் அடங்குவர்.)

'Pre-Matric' உதவித்தொகை:

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை - வருடத்திற்கு ரூ .1000 

6 முதல் 10 ஆம் வகுப்பு வரை - வருடத்திற்கு ரூ .5000 

ஆண்டு வருமான வரம்பு- ரூ .1 லட்சம் கீழ்

முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்கள்  எடுத்திருக்க வேண்டும்.

'Post Matric' உதவித்தொகை:

11 மற்றும் 12-வது வகுப்பு - வருடத்திற்கு ரூ.6000 

இளங்கலை பட்டப்படிப்பு - வருடத்திற்கு ரூ.6000 முதல் ரூ.12000 

ஆண்டு வருமான வரம்பு - ரூ.2 லட்சம் கீழ்

முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்.

'Merit Cum Means' உதவித்தொகை:
 
தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப படிப்புகள் - வருடத்திற்கு ரூ.25000 / ரூ.30000

ஆண்டு வருமான வரம்பு - 2.5 லட்சம் கீழ்

முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்.
  
தேவையான ஆவணங்கள்:

1.சாதி சான்றிதழ்
2.ஆதார் அட்டை
3.இருப்பிடச் சான்று
4.அடையாள சான்று
5.வங்கி புத்தகத்தின் (மாணவர் பெயரில்) நகல் IFSC எண்ணுடன்.
6.பாஸ்போர்ட் அளவு போட்டோ
7.பிறப்பு சான்றிதழ் 
8.கடந்த ஆண்டு மதிப்பெண் பட்டியல்
9.வருமான சான்றிதழ்
10.மத சான்றிதழின் சுய அறிவிப்பு( Self Declaration)
11.ஆர்டர் காபி 

மேலும் சந்தேககளுக்கு: 
78713 40341, 86081 44081, 73738 94278

அன்புடன் அழைப்பது:
மனிதநேய ஜனநாயக கட்சி - MJK
மணமேல்குடி ஒன்றியம்,
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments