கோபாலப்பட்டிணத்தில் குளு குளு கிளைமேட்!!



கோபாலப்பட்டிணத்தில்   குளு குளு கிளைமேடாக காணப்பட்டது.

வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகப் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட  மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது இன்று 08-11-2021 திங்கட்கிழமை  அருமையான கிளைமேட் நிலவியது. வெயில் வராமல் குளிர்ச்சியாக இருந்து வானில் கருமேகங்கள் திரண்டு இருந்தன.

குளு குளு  கிளைமேட் கோபாலப்பட்டிணம் மக்களை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்திருக்கிறது. 

கோபாலப்பட்டிணத்தில் வெப்பக் காற்றில் இருந்து மீண்டு ஊட்டி போல குளு குளுவென காட்சியளித்து.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments