அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லூரியில் - அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்: மாணவர்கள் எதிர்பார்ப்பு!



அறந்தாங்கி அரசு கலை அறி வியல் கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லூரியானது, ஆவுடையார்கோவில் அருகே பெருநாவலூரில் கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர்.

இக்கல்லூரியைச் சுற்றிலும் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. வளாகத்தில் மழை காலங்களில் எந்நேரமும் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சி அளிக்கிறது.

மேலும், கல்லூரி வளாகத் தில் பலர் தங்களது ஆடு, மாடுகளையும் கட்டி வைக்கின்றனர். அத்துடன், இரவு நேரங்களில் பலர் கல்லூரி வளாகத்தில் மது அருந்துவதுடன், பாட்டில்களையும் உடைத்துப் போட்டுவிட்டு சென்று விடுகின்றனர். எனவே, இவற்றுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் கூறியது:

கல்லூரியை சுற்றிலும் வளர்ந்துள்ள சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய சீமைக் கருவேல மரங்களை அகற்றிவிட்டு, சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். போதிய அளவு கழிப்பறைகள் கட்ட வேண்டும்.

கல்லூரி வளாகத்தில் புதர் மண்டியிருப்பதுடன், தேங்கி நிற்கும் மழை நீரால் விஷ ஜந்துகள் அச்சுறுத்தல் உள்ளது. எனவே, இவற்றுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரி வளாகத்தில் இரவு நேரங்களில் கால்நடைகளை கட்டுவோர் மீதும், மது அருந்துவோர் மீதும் நடவடிக்கை எடுக் வேண்டும் என்றார்.

இதுகுறித்து அறந்தாங்கி எம்எல்ஏ எஸ்.டி.ராமச்சந்திரன் கூறியதாவது: கல்லூரிக்கு சுற்றுச்சுவர் கட்டுமாறு உயர்கல்வித் துறை அமைச்சரிடமும், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலும் வலியுறுத்தி யுள்ளேன். தவிர, கூடுதல் பாடப் பிரிவுகளுக்கு அனுமதி அளிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments