காரைக்குடியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வருகிற 11ந்தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

சிவகங்கை  மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி ஆகியவற்றின் சார்பில் வருகிற 11ந்தேதி(வெள்ளிக் கிழமை) காலை 9மணி முதல் மாலை 3மணி வரை காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதில் 80க்கும் மேற்பட்ட தனியார்  நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலை நாடுநர்களை தேர்வு செய்கின்றன.  8&ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் -முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். 

 வேலைநாடுநர்கள் தங்களுடைய பயோடேட்டா (சுயவிவர குறிப்பு), பாஸ்போர்ட் புகைப்படம்,  அனைத்து கல்விச் சான்றிதழ்களின் நகல்கள் மற்றும்  ஆதார் அட்டை நகல் ஆகியவைகளுடன் கலந்து கொள்ள வேண்டும்.   

மேலும் தமிழக அரசின் தனியார் துறை வேலைவாய்ப்பு இணைய தளமான tnprivatejobs.com ல் வேலைநாடுநர்கள்  சுய விவரங்களை பதிவு செய்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். 

முகாம் குறித்த தகவல்களை 04575-240435 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு  தெரிந்து கொள்ளலாம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments