தொண்டியில் முக்கிய ரோடுகள் சந்திப்பில் ரவுண்டானா




    தொண்டியில் முக்கிய ரோடுகள் சந்திப்பில், தாறுமாறாக செல்லும் வாகனங்களை ஒழுங்குபடுத்த, ரவுண்டானா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொண்டி செக்போஸ்ட் அருகில் நம்புதாளை, தொண்டி, திருவாடானை செல்லும் சந்திப்பு உள்ளது. ராமநாதபுரம்-பட்டுக்கோட்டை கிழக்கு கடற்கரை சாலையாகவும், மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையாகவும் உள்ளது. வாகனங்கள் ஒரே நேரத்தில் அப்பகுதியில் சந்திக்கும் போது, போக்குவரத்து நெரிசல், விபத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது.

இது குறித்து சமூக ஆர்வலர் சாதிக்பாட்ஷா கூறியதாவது: இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக, சந்திப்பின் மையப்பகுதியில் ரவுண்டானா அமைத்து, போக்குவரத்தை பிரித்து விடுவதே பிரச்னைக்கு தீர்வாகும். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ரவுண்டானா அமைப்பதின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படவேண்டும், என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments