காலரா நோய் பரவலை கட்டுப்படுத்த காரைக்காலில் 144 தடை உத்தரவு





காரைக்காலில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர்  முகம்மது மன்சூர் உத்தரவிட்டுள்ளார்.
காரைக்காலில் 144 தடை உத்தரவு

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அரசு பொது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவர்கள் சிகிச்சை பெற்று திரும்பி வருகின்றனர். இதில் சில நோயாளிகளுக்கு காலரா தொற்று உறுதியாகியுள்ளது.

காரைக்காலில் காலரா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் இணை நேய்களால் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் காரைக்காலில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் உத்தரவிட்டுள்ளார்.காலரா நோய் பரவலை கட்டுப்படுத்த ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

அனைத்து உணவகங்கள், திருமண மண்டபங்கள், கல்வி நிறுவனங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.

காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காலரா பரவல் எதிரொலியாக நாளை முதல் 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் முகம்மது மன்சூர் உத்தரவிட்டுள்ளார். பள்ளி, கல்லூரிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய உள்ளதால் கல்வி நிலையங்களுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.அரசு பொது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவர்கள் சிகிச்சை பெற்று திரும்பி வருகின்றனர். இதில் சில நோயாளிகளுக்கு காலரா தொற்று உறுதியாகியுள்ளது. காரைக்காலில் காலரா தொற்று எதிரொலியாக அங்கு மாவட்டம் முழுவதும் பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

காரைக்காலில் காலரா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் இணை நேய்களால் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வாந்தி, வயிற்றுப்போக்கால் காரைக்காலில் இதுவரை 1,584 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், காலரா நோய் தடுப்பு முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைய வேண்டாம் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments