கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் பரவலாக மழை






கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் பரவலாக மழை பெய்தது

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
கடந்த 2 தினங்களுக்கு முன்பே, 4 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது... அதன்படி, கடந்த 2 தினங்களாகவே பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது..
 
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கோபாலப்பட்டிணம் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. அவ்வபோது ஆறுதலாக மழை பெய்து வருகிறது 

இந்த நிலையில்  ஜூலை 03 ஞாயிற்றுக்கிழமை   காலை 10.30  மணியளவில் திடீரென மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. இதனால் அப்பகுதியில் குளிர்ந்த காற்று நிலவியது.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments