வடகாடு பகுதியில்வெறி நாய்கள் கடித்து 3 ஆடுகள் செத்தன நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை




வடகாடு பகுதியில் வெறி நாய்கள் கடித்து 3 ஆடுகள் செத்தன. நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

3 ஆடுகள் செத்தன

வடகாடு அருகே உள்ள கீழாத்தூர் பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக, வெறி நாய்கள் கடித்து 3 பேர் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர். அதற்கு மறுநாளே வடகாடு வடக்குப்பட்டியில் அண்ணாதுரை என்பவரது 5 ஆடுகளை வெறி நாய்கள் கடித்து செத்தன. நேற்று மதிய வேளையில் வடகாடு பாப்பாமனையை சேர்ந்த லட்சுமணன் என்பவரது 3 ஆடுகளையும் வெறி நாய்கள் கடித்ததில் செத்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் விரக்தி அடைந்த நிலையில் இருந்து வருகின்றனர்.

மேலும் இப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக ஊராட்சி மூலமாக தெரு நாய்கள் பிடிக்கும் பணிகளும் நடந்து வந்தன. நாய் பிடிக்கும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீட்டில் வளர்க்கும் நாய்களை பிடித்து செல்வதாகவும், தெரு நாய்கள் இவர்களை கண்டவுடன் வெகு தூரம் சென்று விடுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.

கோரிக்கை

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இறைச்சி கழிவுகளை அருகேயுள்ள அம்மன்குளம் பகுதிகளில் கொண்டு சென்று ஒரு சிலர் கொட்டி வருகின்றனர். அதனை சாப்பிட்டு ருசி கண்ட நாய்கள் ஒன்று சேர்ந்து குடியிருப்பு பகுதிகளில் வந்து ஆடு, மாடுகள் மற்றும் சில நேரங்களில் மனிதர்களையும் கடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இறைச்சி கழிவுகள் மற்றும் மொய் விருந்து முடிந்தவுடன் சாப்பிட்ட இலைகள் ஆகியவற்றை குழிதோண்டி மூடாமல் அப்படியே வீசி வருவதும் ஒரு காரணமாக உள்ளது. மேலும் வெறி நாய்கள் கடித்து பலியான ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments