மயிலாடுதுறை - திண்டுக்கல் ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு அக்டோபர் 24 தீபாவளி அன்று தொடக்கம்.




மயிலாடுதுறை - திண்டுக்கல் ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு அக்டோபர் 24  தீபாவளி அன்று தொடக்கம்.

மயிலாடுதுறை - திண்டுக்கல் இடையே ஒரு விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயிலையும் மதுரை - செங்கோட்டை ரயில் ஒன்றாக இணைத்து ஒரே ரயிலாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் 24 தீபாவளி முதல் மயிலாடுதுறை - திண்டுக்கல் - மயிலாடுதுறை விரைவு ரயில்கள் (16847/16848) மற்றும் மதுரை - செங்கோட்டை - மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் (06665/06662) ஆகிய இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே ரயிலாக புதிய ரயில் எண்களுடன் இயக்கப்படும்.

அதன்படி மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயில் (16847) மயிலாடுதுறையிலிருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு இரவு 09.30 மணிக்கு செங்கோட்டை வந்து சேரும்.

மறு மார்க்கத்தில் செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில் (16848) செங்கோட்டையிலிருந்து காலை 07.00 மணிக்கு புறப்பட்டு மாலை 05.10 மணிக்கு மயிலாடுதுறை சென்று சேரும். ‌

இந்த ரயில்கள் குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர், திருவெறும்பூர் மஞ்சத்திடல், திருச்சி, மணப்பாறை, வையம்பட்டி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன் கோவில், பாம்பகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் 12 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்புடன் கூடிய சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும்




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments