அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை அறந்தாங்கி வழியாக செல்லும் செகந்திராபாத் - இராமேஸ்வரம் வாரந்திர எக்ஸ்பிரஸ் ரயில் செக்கந்தராபாத்தில் இருந்து தாமதமாக புறப்படும் - தெற்கு மத்திய ரயில்வே அறிவிப்பு





அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை அறந்தாங்கி வழியாக செகந்திராபாத்- ராமேசுவரத்துக்கு வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் ஆகஸ்ட் 24-ந் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது 

செகந்திராபாத் - இராமேஸ்வரம்

செகந்திராபாத் -ராமேஸ்வரம்   (வண்டி எண் 07695) வாராந்திர  சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் புதன்கிழமை தோறும் இரவு 9.10 மணிக்கு செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு சென்னை எழும்பூரை அடைகிறது. பின்னர் அங்கிருந்து செங்கல்பட்டு விழுப்புரம் திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) சிதம்பரம் சீர்காழி மயிலாடுதுறை திருவாரூர் (15.15),  திருத்துறைப்பூண்டி(15.58), அதிராம்பட்டினம் (16.34), பட்டுக்கோட்டை (16.50), .அறந்தாங்கி (17.50), காரைக்குடி (19.10) சிவகங்கை மானாமதுரை இராமநாதபுரம் வழியாக சென்று வியாழக்கிழமை இரவு 11.40 மணிக்கு ராமேசுவரத்தை சென்றடையும்.

இராமேஸ்வரம் - செகந்திராபாத் 

இதைப்போல மறுமார்க்கத்தில் ராமேஸ்வரம் - செகந்திராபாத் (வண்டி எண் 07696) வாரந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளிக்கிழமை தோறும் காலை 8.50 மணிக்கு ராமேசுவரத்தில் புறப்பட்டு இராமநாதபுரம் மானாமதுரை சிவகங்கை காரைக்குடி (12.05), அறந்தாங்கி (12.29), பட்டுக்கோட்டை (13.13), அதிராம்பட்டினம்(13.29), திருத்துறைப்பூண்டி   (14.03), திருவாரூர் (15.15),‌ மயிலாடுதுறை சீர்காழி சிதம்பரம் திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) விழுப்புரம் செங்கல்பட்டு வழியாக சென்னை எழும்பூர் வெள்ளிக்கிழமை  இரவு 9.50‌ மணிக்கு அடையும் பின்னர் மறுநாள் சனிக்கிழமை மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத்தை அடைகிறது.

அட்டவணையில் இன்று 07-09-2022 மாற்றம்




செகந்திராபாத் - ராமேஸ்வரம் இடையேயான சிறப்பு ரயில் அட்டவணை இன்று 07-09-2022 மாற்றியமைக்கப்படுகின்றன ரயில் எண். 07695 செகந்திராபாத் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் இன்று இரவு 09.10 மணிக்கு செகந்திராபாத் புறப்படுவதற்கு பதிலாக,  07.09.2022 இன்று இரண்டு மணி தாமதமாக இரவு 11.10  மணிக்கு தாமதமாக புறப்படும். என தெற்கு மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments