ஆவுடையார்கோயில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா!ஆவுடையார்கோயில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்வு இன்று (07-09-2022) மதியம் 12.30 மணியளவில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் தலைமை ஏற்றார். சிறப்புவிருந்தினராக அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு S.T.இராமச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு ஆவுடையார்கோவில் மற்றும் அம்பலவாணனேந்தல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். 
இந்நிகழ்வில் ஆவுடையார்கோவில் ஒன்றியக்குழு தலைவர் திருமதி உமாதேவி, அம்பாலவானேந்தல் பள்ளி தலைமையாசிரியர் குழந்தைவேலு, பள்ளி துணை ஆய்வாளர் இளையராஜா, மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், அமரடக்கி பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் விஸ்வநாதன், கூடலூர் முத்து, பெண்கள் உயர்நிலைப்பள்ளி PTA தலைவர் பாண்டியன், பள்ளி மேலாண்மை குழு தலைவி கவிதா, கல்வியாளர் சுகுமார், வார்டு உறுப்பினர் பானுமதி உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளும், அனைத்து ஆசிரியர் பெருமக்களும் மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 
இந்நிகழ்வில் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் சிறப்பரையாற்றுகையில் மாண்புமிகு தளபதியார் தலைமையிலான அரசு கல்வியில் முன்னோடி மாநிலமாக நமது மாநிலம் சிறந்து விளங்கிட  புதுமைப்பெண் திட்டம், காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது.இது போன்ற நலத்திட்டங்கள் அளிப்பதன் நோக்கமே கல்வியில் அனைவரும் சிறந்து விளங்கிட வேண்டும். மேலும் நீங்களும் கல்வியிலும், விளையாட்டிலும் சிறந்த மாணவர்களாக வர வேண்டுமெனவும், பள்ளிக்கு 100% தேர்ச்சியை பெற்று பள்ளிக்கும், நமது பகுதிக்கும் பெருமை சேர்க்கும் விதமாக செயல்பட வேண்டுமெனவும், மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை கூறி தலைமையாசிரியர் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார். பள்ளியின் சார்பாக பிற்படுத்தபட்டோர் நலத்துறை மாணவியர் விடுதி வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது. இதுசார்ந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்கள்.
முன்னதாக உதவி தலைமையாசிரியர் ஸ்டாலின் அனைவரையும் வரவேற்றார். இறுதியில் இயற்பியல் ஆசிரியர் இராஜேந்திரன் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுற்றது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments