பெங்களூர் திருச்சி புதுக்கோட்டை வழியாக செல்லும் SSS ஹூப்ளி - இராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம்-புதுக்கோட்டை-திருச்சி வழித்தடத்தில் கர்நாடக மாநிலத்தின் எந்த பகுதிக்கு நேரடி ரயில் சேவை இல்லாமல் இருந்துவந்தது. இதனால் யஷ்வந்த்பூர்-ராமேஸ்வரம் இடையே புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், தருமபுரி, ஓசூர் வழியாக இரவு நேர ரயில் இயக்கவேண்டும் என்று கோரிக்கையும் வலுத்துவந்த நிலையில், வரலாற்றிலேயே முதன் முறையாக கடந்த மாதம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி வட கர்நாடக பகுதியும் தென்மேற்கு ரயில்வேயின் தலைமையகமான ஹூப்ளியிலிருந்து ராமேஸ்வரத்திற்கு யஷ்வந்த்பூர்,ஓசூர்,தர்மபுரி,சேலம்,நாமக்கல் புதுக்கோட்டை காரைக்குடி மானாமதுரை இராமநாதபுரம் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் சேவை தொடங்கப்பட்டது.
அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே இந்த ரயிலுக்கு அனைத்து ரயில் நிலையங்களிலும் கணிசமான அளவு பயணிகள் பயன்பாடு இருந்துவருகிறது. இவ்வாறு கடந்த 2 மாதகாலமாக புதுக்கோட்டை வழியாக இயங்கி வருகின்ற 07355/56 ஹூப்ளி-ராமேஸ்வரம்-ஹூப்ளி வாராந்திர சிறப்பு ரயிலின் சேவை வரும் செப் 25 வுடன் நிறைவு பெறுகிறது. எனவே நின்று செல்லும் அனைத்து ரயில் நிலைய பயணிகளிடமும் அதிக வரவேற்புள்ள இந்த சிறப்பு ரயிலின் சேவையை வாரம் இருமுறை ரயிலாக மாற்றி மேலும் 3 மாத காலத்திற்கு நீடிக்கப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே 07355/56 ஹுப்ளி-ராமேஸ்வரம்-ஹுப்ளி வழி ஹாவேரி , தவன்கேரே, துமகூரு, யெஷ்வந்த்பூர்(பெங்களூரு), பனஸ்வாடி(பெங்களூரு), ஓசூர், தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை வழியாக இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயிலின் சேவை மேலும் 3 மாதங்களுக்கு (01/01/2023 வரை) நீடிக்கப்பட்டுள்ளது.
ஹூப்ளி/பெங்களூரு/ஓசூர் வாழ் புதுக்கோட்டை வாசிகள் பயன்படுத்திக்கொள்ளவும்.
SSS ஹூப்ளி - இராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் நேர அட்டவணை
அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி பகுதிகளில் இருந்து வாரத்தில் ஒரு நாள் மட்டும் இணைப்பு ரயில் மூலமாக பெங்களூர் செல்லலாம்
வெறும் ₹310 இல் புதுக்கோட்டை - கோவா ரயிலில் போகலாம் வாங்க துத்சாகர் நீர்வீழ்ச்சி, SSS ஹூப்ளி, பெங்களூர், வழியாக புதுக்கோட்டை - வாஸ்கோடகாமா (கோவா) - புதுக்கோட்டை வாராந்திர இணைப்பு ரயில் அட்டவணை & கட்டணவிவரம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.