அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை பேராவூரணி அறந்தாங்கி பகுதிகளில் இருந்து வாரத்தில் ஒரு நாள் மட்டும் பெங்களூர் செல்ல இணைப்பு ரயில் அட்டவணை



அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை பேராவூரணி அறந்தாங்கி பகுதிகளில் இருந்து வாரத்தில் ஒரு நாள் மட்டும் பெங்களூர் செல்ல இணைப்பு ரயில் அட்டவணை.
அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை பேராவூரணி அறந்தாங்கி பகுதிகளில் இருந்து வாரத்தில் ஒரு நாள் மட்டும் பெங்களூர் செல்ல இணைப்பு ரயில் இணைப்பு ரயில் வசதி கிடைத்துள்ளது.

வண்டி எண் 06036 வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாராந்திர விரைவு ரயில்  (ஞாயிறு மட்டும்)

அதிராம்பட்டினம் - ஞாயிற்றுக்கிழமை இரவு 09.40 PM

பட்டுக்கோட்டை - ஞாயிற்றுக்கிழமை இரவு 09.57 PM ‌

பேராவூரணி - ஞாயிற்றுக்கிழமை இரவு 10.15 PM

அறந்தாங்கி - ஞாயிற்றுக்கிழமை இரவு 10.44 PM

காரைக்குடி சந்திப்பு - ஞாயிற்றுக்கிழமை இரவு 11.20 PM

காரைக்குடியில் அரை மணி நேரம் காத்திருக்க வேண்டும்.  காரைக்குடியில் இறங்கி ரயில் மாறிகொள்ள வேண்டும்.

வண்டி எண் 07356 ராமேஸ்வரம் - SSS ஹூப்ளி வாராந்திர விரைவு ரயில் (திங்கள் மட்டும்)

காரைக்குடி - திங்கட்கிழமை அதிகாலை 12.03 AM

புதுக்கோட்டை - திங்கட்கிழமை அதிகாலை 12.52 AM

திருச்சிராப்பள்ளி சந்திப்பு - திங்கட்கிழமை அதிகாலை  02 : 10 AM

கரூர் சந்திப்பு -  திங்கட்கிழமை அதிகாலை  03 : 50 AM

நாமக்கல்  - திங்கட்கிழமை அதிகாலை  04 : 20 AM

சேலம் சந்திப்பு - திங்கட்கிழமை அதிகாலை  05 : 50 AM

தர்மபுரி - திங்கட்கிழமை காலை  07 : 15 AM

ஒசூர் - திங்கட்கிழமை காலை  08 : 52 AM

பனஸ்வாடி  (பெங்களூர்)  - திங்கட்கிழமை காலை 10.00 AM

யஷ்வந்த்பூர் (பெங்களூர்)  - திங்கட்கிழமை காலை 11.30 AM  ‌ சேரும் 

முக்கிய குறிப்புகள் :  

அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை‌ பேராவூரணி அறந்தாங்கி பகுதிகளில் இருந்து பெங்களூருக்கு புறப்படும் பயணிகள்  கவனத்திற்கு 

Reserved (பெங்களூர் பயணம்)

* அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை, பேராவூரணி அறந்தாங்கி பகுதியில் இருந்து பெங்களூருக்கு செல்லும் நபர்கள் முன்பதிவு செய்து பயணம் மேற்காள்ள விரும்பினால் SL, / 3rdAC, /2ndAC ஆகிய வகுப்புகளில் (கோச்) காரைக்குடியில் இருந்து பெங்களூருக்கு முன்பதிவு செய்து கொள்ளவும் 

* அதற்கு முன் வேளாங்கண்ணி எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயிலில் அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை பேராவூரணி அறந்தாங்கியில் இருந்து காரைக்குடி வரை  பொதுப்பெட்டிகளில் பயனிக்கவும் 

Unreserved  (பெங்களூர் பயணம்)

* அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை பேராவூரணி அறந்தாங்கியில் இருந்து பெங்களூர் வரை பொதுப்பெட்டியில் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள் அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி ஆகிய இரயில் நிலையங்களில் இரண்டு ரயிலில் பெங்களூர் செல்ல ஒரே பயணச் சீட்டு வாங்கவும். 

* வேளாங்கண்ணி எர்ணாகுளம் ரயிலில் அதிராம்பட்டினம்/பட்டுக்கோட்டை/பேராவூரணி/அறந்தாங்கி இருந்து 
காரைக்குடி வரை  பொதுப்பெட்டியில் (Unreserved) பயனிக்கவும் 

* அடுத்ததாக இராமேஸ்வரம் ஹூப்ளி ரயிலில் காரைக்குடியில் இருந்து பெங்களூர் வரை  பொதுப்பெட்டியில் (Unreserved) பயனிக்கவும் 

ஹூப்ளி ராமேசுவரம் வாரந்திர சிறப்பு ரயிலில் 5 பொதுப் பெட்டிகள் உள்ளது என்பது கூடுதல் மகிழ்ச்சி தகவல் 

* ராமேஸ்வரம் ஹூப்ளி வாராந்திர சிறப்பு ரயில் ஓசூருக்கு காலை 8.50 மணிக்கு செல்கிறது.. பனஸ்வாடிக்கு காலை 10.00 மணிக்கு செல்கிறது. யஷ்வந்த்பூர் காலை 11.30 மணிக்கு செல்கிறது. ஓசூரில் காலை 8.50 மணிக்கு சேருவதால் வேலை பார்ப்பவர்கள் சீக்கிரமா அலுவலகத்திற்கு செல்ல ஓசூரில் இறங்கி பேருந்து மூலமாக பெங்களூர் சிட்டிற்குள் செல்லலாம்..

* பெங்களூர் மற்றும் ஹீப்ளிக்கு செல்ல  அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை பேராவூரணி அறந்தாங்கி பகுதி மக்களுக்கு இணைப்பு ரயில் வசதி உள்ளது அதாவது ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் வேளாங்கண்ணி எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயிலில் மேல் குறிப்பிட்ட உங்கள் ஊரில் ரயிலில் ஏறி காரைக்குடிக்கு இரவு 11.20 இறங்கி அரை மணி நேரம் காத்து இருக்க வேண்டும் ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் ராமேஸ்வரத்தில் இருந்து ஹீப்ளி செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் காரைக்குடிக்கு அதிகாலை 12.03 மணிக்கு வரும் (அதாவது திங்கட்கிழமை) அதில் பெங்களூர் மற்றும் ஹீப்ளி செல்லலாம்.

* ஆனால் மறுமார்க்க்தில்  ஹீப்ளி மற்றும் பெங்களூர் இருந்து அறந்தாங்கி பேராவூரணி பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் வருபவர்களுக்கு இணைப்பு ரயில் இல்லை காரணம்  எர்ணாகுளம் வேளாங்கண்ணி ரயில் ஒவ்வொரு வாரம்  இரவு 1 மணிக்கு (அதாவது ஞாயிற்றுக்கிழமை) காரைக்குடி  வந்து வேளாங்கண்ணி சென்று விடுகிறது.ஹீப்ளி இராமேஸ்வரம் வாரந்திர சிறப்பு ரயில் ஒவ்வாரு வாரம் அதிகாலை 2 மணிக்கு (அதாவது ஞாயிற்றுக்கிழமை) தான் காரைக்குடி வந்து இராமேஸ்வரம் செல்கிறது..

* உங்களுக்கு சந்தேகம் இருப்பின் கீழே குறிப்பிட்டுள்ள இரண்டு ரயில் அட்டவணைகள் பார்க்கவும் தெளிவு கிடைக்கும்.

நன்றி: பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நல சங்கம்

செய்தி தொகுப்பு : GPM மீடியா

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் அட்டவணை 


SSS ஹூப்ளி - இராமேஸ்வரம் - SSS ஹூப்ளி வாராந்திர சிறப்பு ரயில் அட்டவணை 


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments