"10 நாட்களில் 2வது முறை" பாம்பன் பாலத்தில் நேருக்கு நேர் மோதிய அரசு பேருந்துகள்.. 20 பேர் காயம்!




ராமநாதபுரம்: பாம்பன் பாலத்தில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20 பயணிகள் காயமடைந்துள்ளனர்.


ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் பாலம் வரலாற்று சிறப்புமிக்கது. இந்த பாலத்தில் பயணிப்பவர்கள், பாலத்தில் இருந்து இறங்கி கடலின் அழகை ரசிப்பது வழக்கமானது.
இந்த நிலையில் இன்று காலை அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதேபோல் ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி ஒரு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது.
இந்த இரு அரசு பேருந்துகளும் பாம்பன் பாலத்தில் பயணித்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியுள்ளது. இதில் பேருந்துகளில் பயணம் செய்த 20 பேர் பயணிகள் காயமடைந்தனர். தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீனவர்கள், ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

விபத்தில் நடைபெற்ற இடத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 10 நாட்களில் பாம்பன் பாலத்தில் 2வது முறையாக விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments