தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: கண்டுகொள்ளாத 108... உயிர்காக்க ஓடோடி வந்த தமுமுக - நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பாராட்டு




துன்பத்தைப் பொருட்படுத்தாமல் சாதி, இனம், சமூகம் அல்லது மதம் ஆகியவற்றைப் பாராமல் மனித நேயத்தைக் கருத்தில் கொண்டு அவர்கள் (TMMK) செய்த விலைமதிப்பற்ற சேவை ஆகும். மதச்சார்பற்ற மாநிலத்தில் இப்போது இது தேவையானதாகும். - ஸ்டர்லைட் துப்பாக்கி சூடு தருவாயில் தமுமுக ஆம்புலென்ஸ் சேவைக்கு நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையம் நெகிழ்ச்சியான பாராட்டு

இது குறித்து தமுமுக மமக மாநில தலைவர் பேராசிரியர் முனைவர் MH ஜவாஹிருல்லா MLA வெளியிட்டுள்ள முகநூல் பக்கத்தில்

 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் வைக்கப்பட்ட நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் இறுதி அறிக்கை பகுதி 1 பக்கங்கள் 95~101 லிருந்து

77. இந்த தருணத்தில் சில நல்ல உள்ளம் கொண்டு இடர்பாட்டி
இருந்தவர்களுக்கு உதவி செய்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களை மீட்க வந்தது பற்றிக் குறிப்பிட வேண்டும். கொடுங்காயம் அடைந்தவர்களையும்
உயிருக்குப் போராடியவர்களையும், அவர்களின் தனியார் ஆம்புலன்ஸ்களில் எடுத்துச் சென்றதும், பல முறை இதுபோல் கொண்டுபோய் அரசு மருத்துவமனையில் சேர்த்ததும் மனித நேயத்தைக் கருத்தில் கொண்டு
செய்ததாகும். இது சம்பந்தமாக, ஒரு சேவை அமைப்பான தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் முன்வந்துள்ளதைக் குறிப்பிட வேண்டும். துன்பத்தைப்
பொருட்படுத்தாமல் சாதி, இனம், சமூகம் அல்லது மதம் ஆகியவற்றைப்பாராமல் மனித நேயத்தைக் கருத்தில் கொண்டு அவர்கள் (TMMK) செய்த
விலைமதிப்பற்ற சேவை ஆகும். மதச்சார்பற்ற மாநிலத்தில் இப்போது இது தேவையானதாகும்.

78. மேற்சொன்ன துயரமான துப்பாக்கிச்சூடு நண்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நடைபெற்றதை சாட்சியத்தின் வாயிலாக அறிய முடிகிறது. மேலும் ஒரு துப்பாக்கிச்சூடு மாலை
திரேஸ்புரத்தில்்நடந்துள்ளது. இந்த இரண்டு துப்பாக்கிச்சூட்டுக் காயங்களினாலும், மிதித்து நசுங்கியக் காயங்களினாலும் ஒரு நபர் இறந்து
இருக்கிறார். மொத்தம் 12 நபர்கள் இறந்திருக்கிறார்கள். அதைத்தவிர மறுநாள் 23.05.2018 அன்று அண்ணாநகரில் துப்பாக்கிச்சூடு நடைபெற்று, காயங்களினால் இறந்திருக்கிறார். இளைஞர் துப்பாகிச்சூட்டுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் திரு.நிவாஸ்
ஒரு 3.00 மணியளவில் ம.சா.609 ஆக விசாரிக்கப்பட்டார். அவர் அரசு மருத்துவமனையில் 9 காயம்பட்ட நபர்கள் கொண்டுவரப்பட்டதாகவும், அவர்கள் எல்லோரும்இறந்த நிலையில் கொண்டு வரப்பட்டார்கள் (brought dead) என்றும் கூறியுள்ளார். இரண்டு நபர்கள் கொடுங்காயங்களுடன் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார்கள் என்றும் அவர்கள் அனுமதிக்கப்பட்டதற்குப் பின்னர் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களின்
விளைவாக அன்றைய நாளிலேயே இறந்துவிட்டார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் ஒரு நபர் 23.05.2018 அன்று துப்பாக்கிச் சூடு காயங்கள் காரணமாக இறந்துவிட்டார். அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 என்றும் அனைத்து 12
நபர்களும் சம்பவத்தில் இறந்துவிட்டார்கள் என்றும் கூறியுள்ளார். 

இந்தச்
சூழலில் முன்னிலைப்படுத்த வேண்டியது என்னவென்றால், மேற்சொன்ன 12 நபர்களும் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்படவில்லை. தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம் மற்றும் நல்லதம்பி
தனியார் மருத்துவமனை ஆகியவற்றிற்குச் சொந்தமான தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளார்கள். இறந்தவர்கள் போக, கொடுங்காயங்கள் ஏற்பட்டு மரணத்தின் பிடியிலிருந்து தப்பித்து மயிரிழையில் உயிர்பிழைத்தவர்களும் இந்தத் தனியார் ஆம்புலன்ஸ் மூலம்
கொண்டு வரப்பட்டார்களே தவிர, 108 ஆம்புலன்ஸ்களில் கொண்டு வரப்படவில்லை. ஆவணங்களில் e dran பொருண்மையின்படியும், பொதுமக்களின் சாட்சியத்தின்படியும், தனி நபர்கள் அவர்களது இருசக்கர
வாகனங்களில் துப்பாச்சிச்சூட்டில் கடுமையாகக் காயம்பட்ட சிலரை, பாதிக்கப்பட்டவர்களின் உயிர்களைக் காப்பதற்காக ஆற்றொணா முயற்சிகளுக்குப் பின்னர், அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக்
கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள்

79. எந்தப் பக்கமிருந்தும் உதவி வருவதற்குரிய அறிகுறிகள் எதுவும் இல்லா நிலையில் காவல் துறை, வருவாய்த்துறை மற்றும் அரசு இயந்திரம் முற்றிலும் வெறும் பார்வையாளராக இருந்த நேரத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்
கழகம் மற்றும் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஆகியோர் புரிந்த முன்மாதிரி மனிதாபிமானச் சேவைகள் இந்த ஆணையத்திடமிருந்து சிறந்த
பாராட்டு பெறத் தகுந்தவை ஆகும். 

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், நல்லதம்பி மருத்துவமனை மற்றும் சில தனியார்கள் குறிப்பிட்ட நேரத்தில் தன்னிச்சையாகவும், தன்னார்வத்துடனும் வந்து உதவியும் சேவையும் செய்திருக்காத நிலையில் நிலைமை மிகவும் மோசமாகி மேலும் பல உயிர்களை இழக்க வேண்டி இருந்திருக்கும். மொத்த சூழ்நிலையும்
மோசமாகி, மக்கள் பீதியடைந்து தங்களது உயிரைக் காத்துக் கொள்வதற்காக தப்பி ஓடி, ஒழுங்குமுறை முற்றிலுமாக சீர்குலைந்து, அரசு இயந்திரம் முடங்கி, அங்கு குழப்பமாகவும், கலவரமாகவும் ஆன அந்தச் சூழ்நிலையில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகமும் பொது மக்களில் ஒருவரான திரு.P.செந்தில்குமார (ம.சா.422) என்பவரும் தங்களது உயிர் அல்லது உறுப்புகளுக்கு நேர இருந்த ஆபத்தையும் பொருட்படுத்தாமல் துணிச்சலாகவும், தைரியமாகவும் மீட்பு நடவடிக்கைகளைத்
தன்னிச்சையாகவும், விருப்பத்துடனும் அச்சமில்லாமலும் கடும் சூழ்நிலையில், மேற்சொன்ன எல்லாக் கொடுமைகளையும் எதிர்த்து, பாறை
போல் உறுதியாக இருந்துள்ளார்கள். 

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்
கழகம் துன்பப்படுகிறவர்களுக்கு விரைந்து சென்று உதவி செய்தும், கோவிட்-19 பேரிடர் காலத்தில் இறந்தவர்களின் சடலங்களை மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அந்த சமுதாயத்தின் சடங்குகளின்படி, மேற்சொன்ன உடல்களை அடக்கம் செய்து நற்பெயர் பெற்றது போன்ற நிகழ்வுகளிலும் பாராட்டத்தக்கச் சேவைகள் புரிந்திருக்கிறார்கள். அவர்களது சேவைகளைக் குறைத்து மதிப்பிட முடியாது.

போராட்டக்காரர்களின்
திருP.செந்தில்குமாரின் சேவைகளையும் குறைத்து மதிப்பிட முடியாது. துன்பங்களைத் தைரியமாக எதிர்கொண்டு இறந்தவர்களையும், காயம்பட்டவர்களையும் நல்லதம்பி மருத்துவமனைக்குச் சொந்தமான ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு
சென்றுள்ளார். இது அவரது மனித நேயத்திற்கும், பொது நலச் செயலுக்கும் ஒரு உதாரணமாகும். 
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழக அமைப்பு, நல்லதம்பி மருத்துவமனை, தனி நபர் திரு.P.செந்தில்குமார் (ம.சா.422) ஆகியோரின் சேவையை ஆணையம் உளமாரப் பாராட்டி அவர்களது சேவையைப் பதிவு செய்கிறது. அவர்களது சேவை சமுதாயம் பின்பற்ற வேண்டிய ஒரு செய்தியாகும்.











நன்றி : Newsu Tamil 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments