ஜனவரி 18ம் தேதி புதன் கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்




ஜனவரி 18-ம் தேதி புதன் கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கடந்த 2 நாட்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு 15,16,17 ஆகிய 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. 15-ம் தேதி பொங்கல், 16-ம் தேதி மாட்டுப் பொங்கல், 17-ம் தேதி காணும் பொங்கல் என்று 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் 18-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. இந்நிலையில், வரும் 18-ம் தேதி (புதன் கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பொங்கலுக்கு பின் புதன்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து அரசு முடிவெடுக்கவில்லை எனவும் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments