இதுகுறித்து அறந்தாங்கி கிராமியம் உதவிசெயற்பொறியாளர் பொறிஞர் D. மனோகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அறந்தாங்கி கிராமிய உபகோட்டத்திற்கு உட்பட்ட 110/33-11 KV கொடிக்குளம் துணைமின்நிலையம் மற்றும் 33/11 KV அமரடக்கி துணைமின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வருகிற 30.11.2026 (திங்கட்கிழமை) அன்று நடைபெற உள்ளன.
இதன் காரணமாக, அன்றைய தினம் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை மேற்படி துணைமின்நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், பாலக்குடி, மீமிசல், கோபாலப்பட்டிணம், அரசநகரிப்பட்டினம், கொடிக்குளம், கரகத்திக்கோட்டை, அம்பலவானேந்தல், பாக்கம், மூவலூர் மற்றும் கரூர் திருப்புவனவாசல் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.
எனவே, மின்தடை காரணமாக ஏற்படும் சிரமங்களைப் பொறுத்துக்கொண்டு, பொதுமக்கள் மற்றும் மின்நுகர்வோர்கள் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு தங்களின் மேலான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (தவிர்க்க முடியாத பட்சத்தில் இந்த அறிவிப்பு கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது).
இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.