ஆசிய பசிபிக் நாடுகளில் சிறந்த விமான நிலையமாக திருச்சி விமான நிலையம் தேர்வு
ஆசிய பசிபிக் நாடுகளில் உள்ள 28 விமான நிலையங்களில் விமான நிலைய சேவை மற்றும் தரத்தினை கையாளும் குழுவின் சார்பில் 3 மாதத்துக்கு ஒரு முறை ஆய்வு செய்யப்படும். விமான நிலையத்தில் ஒவ்வொரு நிலைகளிலும் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் பணிகள் பயணிகளுக்கு சேவையின் போது மன நிறைவு அளிக்கும் வகையில் உள்ளதா?. மேலும் சுங்கத்துறை குடியுரிமை பிரிவு, விமான நிறுவனங்களின் சேவை உள்ளிட்டவைகள் ஆய்வு செய்யப்பட்டு சிறந்த விமான நிலையம் தேர்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 2022-ம் ஆண்டு நடத்தப்பட்ட சோதனையில் 2 மில்லியன் பயணிகளை கையாளும் விமான நிலைய பட்டியலில் திருச்சி விமான நிலையம் இடம்பெற்றது. 

மேலும் பயணிகள் விரும்பும் வகையில் சேவை வழங்கி வருவதாக ஆய்வின் மூலம் அறிக்கை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திருச்சி விமான நிலையம் ஆசிய பசிபிக் நாடுகளில் 2 மில்லியன் பயணிகளை கையாளும் பிரிவில் சிறந்த விமான நிலையமாக தேர்வு செய்யப்பட்டது. இதேபோல் இந்தோனேசியாவில் உள்ள மற்றொரு விமான நிலையமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments