ஆர்.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் ரமலான் பிறை 19-க்கான கேள்விகள்!



புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே ஆர்.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தால் நடத்தப்படும் மூன்றாம் ஆண்டு ரமழான் மாத இணைய வழி இஸ்லாமியப் போட்டி ரமலான் பிறை 06 (29/03/2023) முதல் 25 (17/04/2023) வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் 29/03/2023 ரமலான் பிறை-06 முதல் இணைய வழி இஸ்லாமியப் போட்டிக்கான கேள்வி-பதில் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

முக்கிய வேண்டுகோள்:
  • கேள்வி பதில் போட்டியின் முதல் நாளன்று எவ்வாறு தங்களுடைய பெயரையும், முகவரியையும் பதிவு செய்துள்ளீர்களோ அதுபோலவே தினமும் பதிவு செய்யுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
  • கேள்விக்கான பதிலை அளித்துவிட்டு SUBMIT  செய்து விட்டீர்களா என்று சரி பார்த்துக் கொள்ளவும்.
  • நீங்கள் SUBMIT செய்துவிட்டு மீண்டும் ஒருமுறை கேள்விக்கான Link-ஐ கிளிக் செய்து சோதித்து பார்த்துக் கொள்ளவும் . நீங்கள் SUBMIT செய்திருந்தால் "You have already answered this question" என்று வரும் இல்லையென்றால் மீண்டும் பதிலை அளித்துவிட்டு SUBMIT  செய்யவும்.
பிறை 19-க்கான கேள்விகள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பதில் அளிக்கவும்.


குறிப்பு: கேள்விக்கான பதிலை இந்திய நேரப்படி மாலை 5:00 மணிக்குள் அனுப்ப வேண்டும்

அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்து விட்டீர்களா என்று சரிபார்த்துக் கொண்டு SUBMIT செய்யவும்.


 🚨 கேள்வி பதில் நிகழ்ச்சியின் இரு முக்கிய விதிமுறை🚨
  1. ஒரு நபர் தனது வேறு, வேறு பெயர்களில் இரண்டு முறை பதில் அனுப்பக் கூடாது. (உதாரணத்திற்கு ஒரு தாயோ, தந்தையோ தனது இரண்டு பிள்ளைகள் பெயரில் இரு முறை பதில் அனுப்பினால் அந்த பதில் இரண்டுமே ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்).
  2. பதில் அளிக்கக்கூடிய நபர் தனது பெயரில் ஒரு முறை மட்டுமே பதில் அளிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பதில்கள் வந்தால் இரண்டுமே ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
  3. தனக்கு பதில் தெரிந்தால் முடிந்தளவு மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்த்துக் கொள்ளவும்.
பிறை-18 கேள்விக்கான பதில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

போட்டியில் பங்கேற்று பதில் அளித்த அனைவரும் தாங்கள் பதில்களை சரியாக தேர்வு செய்திருக்கிறோமா என்று சரி பார்த்து கொள்ளுங்கள்.

1. நிச்சயமாக நாம் இதை வானங்கள், பூமி, மலைகள் ஆகியவற்றின் மீது எடுத்துக் காட்டினோம். அப்போது அவை அதனை சுமந்துக் கொள்வதை விட்டும் விலகிக் கொண்டன.
ஆனால் மனிதன் அதை சுமந்துக் கொண்டான். அது எது -? வசன எண் குறிப்பிடுக.

அமானிதம் (அல்குர்ஆன்:33:72) 

2. எங்களுடைய ரப்பே ! "எங்கள் பிரயாணங்களுக்கு மத்தியில் நீண்ட  தூரத்தை ஏற்படுத்து வாயாக" என்று அல்லாஹ்விடம் கேட்ட மக்கள் யார்--?

ஸபா நாட்டினர் (அல்குர்ஆன் 34:19)

3.என் தந்தையும் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும் என்று நபியவர்கள் யாரைப் பார்த்துச் சொன்னார்கள்-?

ஸஅத் (ரலி) புஹாரி 4055
ஸுபைர் (ரலி) புஹாரி 3720
ஏதேனும் ஒரு பெயரை குறிப்பிட்டிருந்தாலே மதிப்பெண் உண்டு.

4. இமாமத்திற்கு (தொழுகை நடத்த) அவர்தான்  தகுதியானவர்  என நபியவர்கள் எவரை குறிப்பிட்டார்கள்?

அழகாக ஓதுபவர்

5. நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதினாவிற்கு வருவதற்கு முன்பு வரை, முன்னதாக ஹிஜ்ரத் செய்து வந்தவர்களுக்கு குபா பகுதியில் தொழுகை நடத்திய நபர் யார்?

அபூ ஹுதைபா(ரலி) அவர்களின், அடிமை, ஸாலிம் (ஸஹீஹ் புகாரி : 692.)

இந்தப் போட்டியை குறித்து ஏதேனும் கருத்துக்கள் மற்றும் வேண்டுகோள் இருந்தால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிவிக்கவும்…


இந்த போட்டியை குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments