R.புதுப்பட்டிணம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் நடத்திய மூன்றாம் ஆண்டு கேள்வி-பதில் போட்டியின் வெற்றியாளர்கள் விபரம் வெளியீடு!



மீமிசல் அருகே R.புதுப்பட்டிணம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் நடத்தப்பட்ட மூன்றாம் ஆண்டு கேள்வி-பதில் போட்டியின் வெற்றியாளர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே ஆர்.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தால் நடத்தப்பட்ட மூன்றாம் ஆண்டு கேள்வி-பதில் நிகழ்ச்சி 2023-ஆண்டு ரமலான் பிறை 06 முதல் 20 வரை நடைபெற்றது.

இதில் ஏராளமான போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற போட்டியாளர்களில் வெற்றி பெற்றவர்களின் விபரம் நோன்பு பெருநாள் அன்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் வெற்றி பெற்றவர்கள் விபரம்  வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து அல் அமீன் இளைஞர் நற்பணி மன்றம் வெளியிட்டுள்ள செய்தியில்

அல் அமீன்  இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் மூன்றாம் ஆண்டு கேள்வி பதில் நிகழ்ச்சியில் முதல் மூன்று இடத்தை பிடித்த நபர்கள் மற்றும் 95 சதவீதம் மேல் மதிப்பென் வாங்கிய நபர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள்  மற்றும் கலந்து கொண்டவர்கள் என அனைவருக்கும் மன்றத்தின் சார்பாக  வாழ்த்துக்களையும் சலாத்தையும் தெரிவித்து கொள்கிறோம். இன்ஷா அல்லாஹ் பரிசு பொருள் விரைவில் தங்களுடைய இல்லம் தேடி வந்து கொடுக்கப்படும். மேலும் போட்டியில் 10 நாட்களுக்கு மேல் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். வெளியூர் வாசிகளுக்கு E-சான்றிதழ் கொடுக்கப்படும்.

முதல் இடம் பிடித்தவர்கள்:
  1. பர்ஹான் - R.புதுப்பட்டினம்
  2. அப்ஷின் சிஃப்ரா - மீமிசல்
  3. J.உஸ்மான் அலி - கோபாலப்பட்டிணம்
  4. ஜபீரா பேகம் - ஜெகதாப்பட்டினம்
  5. ஜெஷினா பர்வீன் - ஜெகதாப்பட்டினம்
  6. ரஹ்மான் - கோட்டைப்பட்டினம்
இரண்டாம் இடம் பிடித்தவர்கள்:
  1. A.ஜர்ஜினா பானு - R.புதுப்பட்டினம்
  2. முர்ஷிதா பர்வீன் - R.புதுப்பட்டினம்
  3. ஆமினா - கோபாலப்பட்டிணம்
  4. நஸ்ரின் பாத்திமா - கோபாலப்பட்டிணம்
  5. ஜிம்ரத் ஆஃப்ரா - SP மடம்
மூன்றாம் இடம் பிடித்தவர்கள்:
  1. N.சபினத் நிஷா -  R.புதுப்பட்டினம்
  2. சுபையர் கான் - R.புதுப்பட்டினம் 
வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கேற்றவர்கள் அனைவருக்கும் GPM மீடியாவின் வாழ்த்துக்கள்.

முதல் மூன்று இடங்ககளை பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசும் மற்றும் 95% சதவீதத்திற்கு மேல் எடுத்தவர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கக்கப்பட உள்ளது.

R.புதுப்பட்டிணம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்தவர்களுக்கு பரிசு பொருட்களை நேரடியாக உங்களுடைய இல்லத்திற்கு வந்து வழங்கப்படும். மேலும் வெளியூர் நபர்களுக்கு கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கின்றோம்.

வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கேற்றவர்களின் மதிப்பெண் பட்டியல் விபரம்:






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments