மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 21 பேருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது.
கலந்தாய்வு
தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு சென்னையில் நடைபெற்று வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தை சோ்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 49 பேர் கலந்து கொள்ள அழைப்பு வந்திருந்தது. இதில் மாணவ-மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்றனர். ‘நீட்’ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் தரவரிசை அடிப்படையில் மாணவ-மாணவிகளுக்கு இடம் கிடைத்தது. இதில் எம்.பி.பி.எஸ். படிப்பில் 19 பேருக்கும், பல் மருத்துவ படிப்பில் 2 பேருக்கும் என மொத்தம் 21 பேருக்கு மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைத்தது.
அரசு பள்ளி மாணவர்கள்
பரம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் பிரவீன், வெண்ணவால்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் நந்தகுமரன், கந்தர்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பவித்ரா, ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் பாலகிருஷ்ணன், மனோஜ், சுப்ரமணியபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ராஜேஸ்வரி, நிவேதா, சூரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் பிரகாஷ், அரிமளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ரத்தினவேல், தாஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் மகேஸ்வரன், சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் சீனிவாசன், சுப்ரமணியபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஹரிராஜ், ஜெகதீஸ்வரன், ராப்பூசல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி காயத்ரி, கல்லாக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி யுவதிகா, விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் அறிவுநிதி, சந்தைப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி செல்லமுத்து, கீரமங்கலத்தை சேர்ந்த மாணவிகள் சுருதி, ஜனனி, சுபதாரணி, ஆலங்குடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி அனுஜா உள்பட மொத்தம் 21 பேர் ஆவர். இவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளை தேர்வு செய்தனர். கடந்த ஆண்டு மருத்துவ படிப்பில் புதுக்கோட்டை மாவட்ட அரசு பள்ளி மாணவ- மாணவிகள் 26 போ் சேர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.