கோபாலப்பட்டிணம்‌ மீமிசல் பகுதியில் மழை - குளு குளு கிளைமேட்



 



கோபாலப்பட்டிணம்‌ மீமிசல் பகுதியில் மழை பெய்தது குளு  குளு கிளைமேடாக உள்ளது 

பருவநிலை மாறுபாடு காரணமாக  தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை அவ்வப்போது பெய்து வருகிறது. காலை வெயில் வாட்டி வதைப்பதும் மாலை நேரத்தில் கனமழை வெளுத்து வாங்குவதும் வழக்கமாக இருந்து வருகிறது. 


மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டிணம் மீமிசல பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது இந்தநிலையில் அதிகாலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது  வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல்நிலவியது. 

தற்போது பெய்த சாரல் மழையினால்  விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments