சிவகங்கையில் முக்கிய ரயில்கள் நிற்காததை கண்டித்து செப்.23-ல் ரயில் மறியல், கடையடைப்பு போராட்டம்




சிவகங்கையில் முக்கிய ரயில்கள் நிற்காததை கண்டித்து, செப்.23-ம் தேதி ரயில் மறியல், கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக, திமுக உள்ளிட்ட கட்சிகள், பொதுநல அமைப்புகள் அறிவித்துள்ளன.
மாவட்டத் தலைநகரான சிவகங்கையில், செங்கோட்டை-தாம்பரம் விரைவு ரயில், ராமேசுவரம்-வாரணாசி விரைவு ரயில், ராமேசுவரம்- அயோத்தி விரைவு ரயில், ராமேசுவரம்- அஜ்மீர் விரைவு ரயில், ராமேசுவரம்- ஹுப்ளி விரைவு ரயில், எர்ணாகுளம்-வேளாங்கண்ணி விரைவு ரயில் உள்ளிட்ட முக்கிய ரயில்கள் நிற்பதில்லை. இந்த ரயில்களை, சிவகங்கையில் நிறுத்த வேண்டும்.
மேலும், திடீரென காரைக்குடியோடு நிறுத்தப்பட்ட மன்னார்குடி-மானாமதுரை ரயிலை, மீண்டும் மானாமதுரை வரை இயக்க வேண்டும். 

சென்னையிலிருந்து காரைக்குடி வரை வரும் பல்லவன் ரயிலை, மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும். 

சென்னையிலிருந்து செங்கோட்டை செல்லும் சிலம்பு ரயிலை தினமும் இயக்க வேண்டும்.

சென்னையிலிருந்து ராமேசுவரத்துக்கு பகல் நேர ரயில் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திமுக, காங்கிரஸ், மதிமுக. இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள். போராட்டம் நடத்தவும், சிவகங்கையில் இருந்து கீழக்கண்டனி வரை 10 இடங்களில் ஆங்காங்கே ரயில் மறியலில் ஈடுபடவும் முடிவு செய்யப்பட்டன. 
 
இதுகுறித்து நேற்று சிவகங்கை நகராட்சித் தலைவர் சி.எம்.துரை ஆனந்த் தலைமையில், மதுரைகோட்ட ரயில்வே மேலாளரிடம் மனு அளித்தனர்.

பின்னர், சி.எம்.துரை ஆனந்த் கூறிய தாவது: 

பல ரயில்கள் சிவகங்கையில் நிற்காமல் செல்கின்றன. மேலும், ரயில்வே நிலையமும் மிகமோசமாக எந்த அடிப்படை வசதியுமின்றி இயங்கி வருகிறது. முன்பதிவு மையம் தனியாக இல்லை எனவே, ரயில் மறியல் போராட்டம் அறிவித்துள்ளோம். இதில், சிவகங்கை, காளையார்கோவில் பகுதி பொதுமக்கள் பங்கேற்கின்றனர் என்றார். 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments