ஆவுடையார்கோவிலில் கிராமிய கரக ஆட்டத்துடன் கள்ளச்சாராய விழிப்புணர்வு பேரணி




புதுக்கோட்டை மாவட்டம்,  ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து கள்ளச்சாராய  விழிப்புணர்வு பேரணி தொடங்கி நடைபெற்றது.

ஆவுடையார் கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் கள்ளச்சாராய விழிப்புணர்வு பேரணி கிராமிய கரக ஆட்டத்துடன் தொடங்கியது. பேரணியை வட்டாட்சியர் மார்ட்டின் லூர்து கிங், தொடங்கி வைத்தார். பேரணியில் கல்லூரி மாணவிகள் மற்றும் வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு நகரின் முக்கிய வீதிகளான வடக்கு வீதி, கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி  வழியாக வட்டாட்சியர் அலுவலகத்தில் பேரணி முடிவடைந்தது. பேரணியில் பொதுமக்கள் மற்றும் இளைஞர் நலன் கருத்தில் கொண்டு கள்ளச்சாரத்துக்கு எதிராகவும், மது அருந்துதல் மது அருந்தி வாகனம் ஒட்டுதல் மற்றும் போதைப்பொருட்கள் தவறாக பயன்படுத்துதல் ஆகியவற்றிற்கு  எதிராக விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை பொதுமக்களிடம் வட்டாட்சியர் வழங்கினார்.

பேரணியில் கலால்வருவாய் ஆய்வாளர்  முத்தரசன், அலுவலர்கள் காமராஜ், வினோத்குமார் மற்றும் அலுவலக அதிகாரிகள், பாரதிதாசன் கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments