கிருஷ்ணாஜிப்பட்டினம் அருகே காரக்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் இடைநின்ற மாணவி மீண்டும் ஆறாம் வகுப்பில் பள்ளியில் சேர்ப்பு




கிருஷ்ணாஜிப்பட்டினம் அருகே காரக்கோட்டை  அரசு உயர்நிலைப் பள்ளியில்  இடைநின்ற மாணவி மீண்டும் ஆறாம் வகுப்பில் பள்ளியில் சேர்க்கப்பட்டார் 

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்தில் கிருஷ்ணாஜிப்பட்டினம்
காரக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பில் அபிநயா என்ற மாணவி பள்ளிக்கு ஆறு மாத காலமாக வரவில்லை. தலைமை ஆசிரியர் பலமுறை வீட்டிற்கு சென்று பள்ளிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். மாணவி பிடிவாதம் பிடித்து பள்ளிக்கு வராமல் காலம் தாழ்த்தி உள்ளார். 

நேற்று  அபிநயா மாணவியை கலக்கமங்களம் கிராமத்தில் நேரில் தலைமை ஆசிரியர் பொறுப்பு சுந்தராஜன் மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் ஆகியோர் சந்தித்து 3 மணி நேரம் படிப்பின் அவசியம் எடுத்துக் கூறப்பட்டது. இன்று மாணவியை நேரில் அழைத்து சென்று ஆறாம் வகுப்பில்  மீண்டும் சேர்க்கப்பட்டது. புத்தகங்கள் மற்றும் பாடநோட்டுகள் வழங்கப்பட்டது.

மாணவி அபிநயா தொடர்ந்து பள்ளிக்கு வருவதாக உறுதி அளித்தார். 

இந்நிகழ்வில் இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் கண்ணன் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments