ராமநாதபுரம் மாவட்ட இறகு பந்து கழகம், தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப், ரேலி ஸ்போர்ட்ஸ் ஆகியவை சார்பில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் அகில இந்திய இறகுப்பந்து போட்டியை தொண்டியில் நடத்தியது.இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டு விழா ரேலி ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட இறகு பந்து கழக துணைத்தலைவர் சாதிக் பாட்ஷா தலைமை தாங்கினார். ரேலி ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் ரகுமத்துல்லா, ஐக்கிய ஜமாத் தலைவர் ஹிப்பத்துல்லா, இந்து தர்ம பரிபாலன சபை தலைவர் ராஜசேகர், தொண்டி பங்கு தந்தை வியாகுல அமிர்தராஜ், நம்புதாளை ஊராட்சி தலைவர் பாண்டிச்செல்வி ஆறுமுகம், பாரத் பவர் ஜிம் ஆனந்தன், பொறியாளர் சபியுல்லாஹ், ரேலி ஸ்போர்ட்ஸ் அப்துல் கரீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அனைவரையும் டாப் டெக்ஸ் முகமது பைசல் வரவேற்றார். விழாவில் ராமநாதபுரம் மன்னர் நாகேந்திர சேதுபதி, ராமநாதபுரம் டி.ஐ.ஜி. துரை, அரசு வக்கீல் கார்த்திகேயன்,விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார், தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் நம்பு ராஜேஷ், திருவாடானை அரசு வக்கீல் கணேச பிரபு, கிராம உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
இதில் இறகு பந்தாட்ட கழக நிர்வாகிகள் பிரபாகரன், ராமமூர்த்தி, பேட்மிட்டன் கோர்ட் ஓனர் அசோசியேஷன் நிர்வாகிகள் ராஜசேகர், இஸ்லாமிக் மாதிரி மேல்நிலைப்பள்ளி தாளாளர் அபுபக்கர், அல்ஹிலால் மேல்நிலைப்பள்ளி தாளாளர் அப்துல் ரவுப் நிஸ்தார், ஐக்கிய ஜமாத் தலைவர் அயுப்கான், தொண்டி பைத்துல்மால் தலைவர் செய்யது அலி, பெர்லின், நெய்னார் ஹாஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பரிசுகளை பேரூராட்சி கவுன்சிலர் காத்தார்ராஜா சுகுமார், சீனிவாசன், சக்தி, பழனி, சீத்தாராமன், நாகா சதிஸ், இந்து தர்ம பரிபாலன சபை துணைத்தலைவர் ராஜேந்திரன், பொறியாளர் சதாம், ஆனிமுத்து வெற்றிவேல், திருநாவுக்கரசு ஆகியோர் வழங்கினர். முடிவில் தொண்டி பேரூராட்சி கவுன்சிலர் பெரியசாமி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை வள்ளல் சசிக்குமார், இஸ்ஸத்தின் பாலா, ஆசிர், அப்துல்லாஹ் மூஷா ஆகியோர் செய்திருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.